Asianet News TamilAsianet News Tamil

100 நோயாளிகளை கொலை செய்த கொடூர நர்ஸ்! நீதிமன்றத்திலும் ஒப்புக் கொண்ட கொடுமை!

100 நோயாளிகளுக்கு தவறான மற்றும் கூடுதலாக மருந்து கொடுத்து கொலை செய்தது உண்மை தான் என்று நர்சாக பணியாற்றியவர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். 

German Nurse Who Killed Over 100 Patients
Author
Germany, First Published Oct 31, 2018, 9:48 AM IST

100 நோயாளிகளுக்கு தவறான மற்றும் கூடுதலாக மருந்து கொடுத்து கொலை செய்தது உண்மை தான் என்று நர்சாக பணியாற்றியவர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். German Nurse Who Killed Over 100 Patients

ஜெர்மனியின் ஓல்டன்பெர்க் நகரைச் சேர்ந்தவர் நீல்ஸ் ஹோகெல். இவர் அந்நகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் நர்சாக பணியாற்றியவர். கடந்த 2005ம் ஆண்டு நோயாளி ஒருவருக்கு கூடுதலாக மருந்து கொடுத்த குற்றத்திற்காக நீல்ஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கின் விசாரணையின் போதே நீல்ஸ் தனது உறவினருக்கும் கூடுதல் மருந்து கொடுத்து கொலை செய்துள்ளதாக மற்றொருவர் குற்றஞ்சாட்டினார். German Nurse Who Killed Over 100 Patients

இந்த குற்றச்சாட்டை நீல்ஸ் ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் நீல்சுக்கு மனநல மருத்துவர் கவுன்சிலிங் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. அப்படி கவுன்சிலிங் கொடுத்துக் கொண்டிருந்த போது தான் ஒரு நாள் தான் 2000ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை சுமார் 200 பேருக்கு தவறான மருந்து மற்றும் கூடுதலாக மருந்து கொடுத்து கொலை செய்துள்ளதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். German Nurse Who Killed Over 100 Patients

இதனால் அதிர்ந்து போன மருத்துவர் நீல்ஸ் கூறிய தகவல் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விசாரணையில் நீல்ஸ் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வந்த சுமார் 100 பேருக்கு கூடுதல் மற்றும் தவறான மருந்துகளை கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. கூடுதல் மற்றும் அதிகமான மருந்து கொடுப்பதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடும் நோயாளிகளை தன்னால் காப்பாற்ற முடியுமா? என்று பரிசோதிக்க இவ்வாறு செய்ததாக நீல்ஸ் கூறியுள்ளார். German Nurse Who Killed Over 100 Patients

ஒரு கட்டத்தில் நோயாளிகள் உயிருக்கு போராடுவதை பார்த்து ரசிக்க ஆரம்பித்து தொடர் கொலைகளை நீல்ஸ் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை ஓல்டன்பர்க் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நோயாளிகள் 100 பேருக்கு தவறான மருந்து கொடுத்து கொலை செய்தது உண்மை தானா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ஆனால் அதற்கு சற்றும் தயங்காமல் மிகச்சரி தான் இதுவரை 100 பேரை கொலை செய்துள்ளேன் என்று பதில் அளித்துள்ளார் நீல்ஸ். சரி மருத்துவரிடம் 200 பேரை கொலை செய்தததாக நீல்ஸ் கொடுத்த வாக்குமூலம் குறித்து விசாரித்த போது அவர் கூறிய எஞ்சிய 100 பேர் குறித்த தகவல்கள் மருத்துவமனைகளில் தற்போது இல்லை என்பதால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios