உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்... ஃபாக்ஸ் நியூஸ் ஒளிப்பதிவாளர் பியர் ஜக்ரெஸ்கி பலி!!
Fox News செய்தி ஒளிப்பதிவாளர் Pierre Zakrzewski, உக்ரைனின் தலைநகர் கீவின் புறநகரில், பணியாற்றிக்கொண்டிருக்கும் போது, ரஷ்யா தாக்குதலின் போது காரில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
Fox News செய்தி ஒளிப்பதிவாளர் Pierre Zakrzewski, உக்ரைனின் தலைநகர் கீவின் புறநகரில், பணியாற்றிக்கொண்டிருக்கும் போது, ரஷ்யா தாக்குதலின் போது காரில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தார். உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கடந்த பிப்ரவரி 24 அன்று உக்ரைன் மீது தாக்குதலை நடத்த தொடங்கினார். இந்த தாக்குதலில் குறைந்தது 596 மக்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் சரியான எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருப்பதாக நம்பப்படுகிறது. உக்ரைனின் தலைநகரான கீவ் நகர் மீது ரஷ்யா தற்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் போர் நடக்கும் இடத்தில் செய்தி சேகரிக்க பாக்ஸ் நியூஸ் ஒளிப்பதிவாளர் பியரி ஜாக்ர்ஸெவ்ஸ்கி பத்திரிகையாளர் பெஞ்சமின் ஹாலுடன் செய்தி சேகரித்து வந்துள்ளனர்.
பியரி ஜாக்ர்ஸெவ்ஸ்கி போர் மண்டல புகைப்படக் கலைஞர். இவர் போரில் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளை புகைப்படம் எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் ரஷ்ய நடத்திய தாக்குதலில் அவர்களின் காரில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி ஒளிப்பதிவாளர் பியரி ஜாக்ர்ஸெவ்ஸ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பத்திரிகையாளர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை Fox News Media தலைமை நிர்வாக அதிகாரி சுசானா ஸ்காட் தனது அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தினார். ஒரு பத்திரிகையாளராக பியரி ஜாக்ர்ஸெவ்ஸ்கியின் ஆர்வமும் திறமையும் ஒப்பிடமுடியாதது. லண்டனை சேர்ந்த பியரி, கடந்த பிப்ரவரி முதல் உக்ரைனில் பணிபுரிந்து வருகிறார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை ஏராளமான புகைப்பட கலைஞர்களும், பத்திரிகையாளர்களும் உயிரிழந்துள்ளனர். அத வகையில், விருது பெற்ற அமெரிக்க பத்திரிகையாளர் பிரென்ட் ரெனாட் உக்ரேனிய நகரமான இர்பினில் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்ட சில நாட்களில் ஜுவான் அர்ரெடோண்டோ என்ற அமெரிக்க புகைப்படக் கலைஞர் காயமடைந்தார். அதை தொடர்ந்து உக்ரைனில் நடந்த போரில் கொல்லப்பட்ட முதல் வெளிநாட்டு பத்திரிகையாளர் ரெனாட் ஆவார். உக்ரேனிய கேமரா ஆபரேட்டர் யெவ்னி சகுன், இந்த மாத தொடக்கத்தில் கிய்வின் தொலைக்காட்சி கோபுரம் ஷெல் தாக்கியதில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.