Donald Trump: டொனால்ட் ட்ரம்ப் நிறுவனம் மீது மோசடி வழக்கு.. இது என்னடா ட்ரம்புக்கு வந்த சோதனை.!!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிறுவனம் மீது மோசடி வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஒரு நபர் இரண்டு முறைதான் அதிபராக முடியும். முதல் முறை அதிபராக இருந்தவர் பெரும்பாலும் அடுத்த முறையும் போட்டியிடுவார். அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.
இதில் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார். அத்துடன் பல மாகாணங்களில் வழக்கும் தொடுத்தார். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையில், அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?
போராட்டம் கலவரமாக வெடித்தது. இது அமெரிக்க வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாக கருதப்படுகிறது. இந்த நிலையில் 15 ஆண்டுகளாக வரி அதிகாரிகளை ஏமாற்றியதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது ட்ரம்பின் நிறுவனம். டொனால்ட் டிரம்பின் நிறுவனத்திற்கு 15 ஆண்டுகால வரி மோசடி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் மற்றும் அவரது வயது வந்த குழந்தைகளான டொனால்ட் டிரம்ப் ஜூனியர், இவான்கா டிரம்ப் மற்றும் எரிக் டிரம்ப் ஆகியோர் கடன்கள் மற்றும் காப்பீட்டில் பணத்தை மிச்சப்படுத்த தனது நிகர மதிப்பு மற்றும் அவரது நிறுவனத்தின் சொத்துக்களின் மதிப்பை உயர்த்தியதாக குற்றம் சாட்டி 250 மில்லியன் டாலர் சிவில் வழக்கை எதிர்கொண்டுள்ளனர்.
நான்கு வார விசாரணையில், வழக்கறிஞர்கள் ட்ரம்பின் நிறுவனம் நிர்வாகிகளுக்கான வாடகை மற்றும் கார் குத்தகை போன்ற தனிப்பட்ட செலவினங்களை வருமானமாகப் புகாரளிக்காமல் உள்ளடக்கியது என்பதற்கான ஆதாரங்களை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..நாட்டு நாட்டு பாட்டுக்கு இவங்க ஆடியிருக்காங்களா.? ஆச்சர்யப்பட்ட ஆனந்த் மஹிந்திரா - வைரல் வீடியோ!
இதையும் படிங்க..சேது சமுத்திர திட்டத்தால் எந்த பயனும் இல்லை.. யாருக்கு பயன் தெரியுமா? திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை