ஒரே நேரத்தில 2 பெண்களை கல்யாணம் பண்ணிக்கப் போறாரு இந்த பிரபல கால்பந்து வீரர்… பெண் ரசிகர்கள் எல்லாம் அப்டியே ஷாக் ஆயிட்டாங்களாம் !!
பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரரான ரொனால்டினோ ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்தித் தாள்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரேசில் நாட்டின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் பிரபல வீரர் ரொனால்டினோ. கால்பந்து விளையாட்டில் பெரும் ஜாம்பாவானாக கருதப்படும் இவருக்கு ஆண் ரசிகர்களை விடவும் பெண் ரசிகர்களே அதிகம்.
இந்நிலையில் கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரொனால்டினோ
வரும் ஆகஸ்ட் மாதம் ரியோ டி ஜெனிரோவில் உள்ள தனது வீட்டிலேயே இரு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக யோ டி ஜெனிரோ என்ற பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த திருமண விழா மூன்று-நபர் சிவில் தொழிற்சங்கத்தின் ஒரு அரிய வடிவமாக இருக்கும் என அமெரிக்கா தற்போது அறிவித்துள்ளது. ஆனால் பிரேசில் நாட்டின் சட்டத்திற்கு விரோதமாக இருக்கும் இந்த திருமணத்திற்கு ஆறு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஆனாலும் இரண்டு பெண்களுக்கு ஒரு திருமண விழா என்பதால் இதனை இரு திருமணங்களாக கருத வேண்டாம் என்றும் இது ஒரே திருமணம்தான் என்றும் பிரேசில் சட்டம் கூறுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ரொனால்டினோவை திருமணம் செய்து கொள்ளப் போகும் இந்த இரு பெண்களும் முன்னாள் கால்பந்து வீராங்கனைகளான பிரிஸ்கில்லா கோலிஹோ மற்றும் பீட்ரிஸ் சவுஸா ஆவார்.
தற்போது இவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் முதலே லிவிங் டு கெதர் என்ற முறையில் ரொனால்டினோவுடன் தங்கி வருகின்றனா் என்ற செய்தியும் வெளிவந்துள்ளது. ரொனால்டினோ ஆண் ரசிகா்களை விடவும் பெண் ரசிகா்களை அதிகம் கொண்டவா் என்பதால் தற்போது அவரது அனைத்து பெண் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.