புளோரிடாவில் 17 வயது சிறுவனை பெண் ஒருவர் 20 முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அப்பெண்ணிடம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில்; குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பெண் சிறுவனை இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுப்பதற்கு முன் DNA பரிசோதனையில் பாதிக்கப்பட்டவர் குழந்தைகளின் தந்தை என்பது உறுதி செய்யப்பட்டது. தனது பாலியல் இச்சைக்கு அந்த சிறுவனை 15 வயதிலிருந்தே பயன்படுத்தியுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். 

அந்த சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்தது ஆர்லாண்டோவின் ஸ்பிரிங் டர்னர் என்பது தெரியவந்தது. தனது முகநூல் பக்கத்தில் அந்த பெண் தன்னை "ஒரு சிறந்த 17 வயது மகனின் அம்மா அழகான இரட்டையர்கள் ஐ லவ் யூ 3" என்று தனக்கு இருமகன்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால், அவருக்கு ஒருமகன் மட்டுமே இருப்பதும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த சிறுவனையும் தனது மகனாக கூறியுள்ளார் என்கிற விவரத்தை தனியார் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து அந்த சிறுவன் அதிகாரிகளிடம் கூறுகையில்; " அந்த பெண் எனது விருப்பம் இல்லாமல் என்னை பலாத்காரம் செய்தார். என்னை அவருக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள கஞ்சாவை கொடுத்து மயக்கினார். பள்ளியில் இருந்து திரும்பி வரும் போது இரவு வரை என்னை பயன்படுத்திக்கொள்வார். உடன்படவில்லை என்றால் எனது சகோதரனை வேலையில் இருந்து நீக்கவதாக மிரட்டினார். இதுகுறித்து அந்த பெண்ணின் நடத்தையை விசாரித்த போலீஸ் அதிகாரிகளுக்கு அவர்  17 வயதில் சிறுவனுடன் "மட்டுமே" உடலுறவு கொண்டார் என்பது தெரிவந்தது. இதனையடுத்து, டர்னர் கைது செய்யப்பட்டு பிணையில் வரமுடியாத வழக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.