ரஷ்யாவில் துப்பாக்கியில் இருந்து வெளியான நெருப்பினால் பற்றி எறிந்த ஓட்டல்; 15பேர்உயிரிழப்பு!!
ரஷ்யாவின் கோஸ்ட்ரோமா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் காயமடைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது.
இன்று அதிகாலை ஓட்டலில் ஏற்பட்ட தகராறின் போது ஒருவர் நெருப்பு வரும் துப்பாக்கியை பயன்படுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.
மீட்புப் படையினர் ஓட்டலில் இருந்து 250 பேரை வெளியேற்றினர். கோஸ்ட்ரோமா பிராந்தியத்தின் ஆளுநர் செர்ஜி சிட்னிகோவ், 5 பேர் லேசான காயமடைந்து இருப்பதாகவும், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நெருப்பு பிழம்பு வரும் துப்பாக்கியை பயன்படுத்தியது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஓட்டலுக்கு குடிபோதையில் வந்திருந்த ஒருவர் கையில் துப்பாக்கி வைத்து இருந்துள்ளார். துப்பாக்கியை கையில் ஏந்தியவாறு தன்னுடன் வந்த பெண்ணுக்கு பூ கொடுக்குமாறு கேட்டுள்ளார். அத்துடன் கையில் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, நடன மேடைக்கு சென்று துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதுதான் ஓட்டலில் தீ விபத்து ஏற்படக் காரணம் என்று கூறப்படுகிறது.
மாஸ்கோவில் இருந்து 210 கி. மீட்டர் தொலைவில் ஆற்றங்கரை அருகே கோஸ்ட்ரோமா அமைந்துள்ளது. இங்கு 2.70 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டில் லாமே இரவு கேளிக்கை விடுதியில் நடந்த தீ விபத்தில் 150 பேர் உயிரிழந்து இருந்தனர்.