Asianet News TamilAsianet News Tamil

ஏழே நிமிடத்தில் புற்றுநோய்க்கு நிவாரணம்! பிரிட்டனில் முதல் முறையாக பயன்பாட்டுக்கு வரும் ஊசி!

புதிய மருந்து தோலுக்குக் கீழ் செலுத்தப்படுவதால் சுமார் 7 நிமிடங்களில் மருத்து வேலை செய்ய ஆரம்பித்துவிடும். பிரிட்டன் இந்த ஊசியை பயன்படுத்தும் முதல் நாடு ஆகும்.

First ever 7 minute cancer treatment jab to be rolled out in England sgb
Author
First Published Sep 1, 2023, 1:55 AM IST

உலகின் முதல் ஏழு நிமிட புற்றுநோய் சிகிச்சை ஊசியை இங்கிலாந்து அறிமுகப்படுத்த உள்ளது. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (NHS) அமைப்பு இந்த ஊசியை பயன்படுத்தும் உலகின் முதல் சுகாதார அமைப்பு ஆகும். இந்த ஊசியின் மூலம் சிகிச்சைக்கான நேரத்தை வெகுவாகக் குறைக்க முடியும்.

செவ்வாய்க்கிழமை, அந்நாட்டு தேசிய சுகாதார சேவை நோயெதிர்ப்பு சிகிச்சை பெற்ற நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு தோலின் கீழ் போடப்படும் அட்ஸோலிசுமாப் ஊசிகளைப் போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை முகமை (MHRA) இந்த ஊசியின் பயன்பாட்டை அங்கீகரித்துள்ளது.

தற்போது, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நோயெதிர்ப்பு சிகிச்சையாக அட்ஸோலிசுமாப் (Atezolizumab) மருந்தை நேரடியாக நரம்புகளுக்குள் ஏற்றும் முறை நடைமுறையில் உள்ளது. வழக்கமாக இந்த முறையில் நரம்பிற்குள் செலுத்தப்படும் அட்ஸோலிசுமாப் மருந்து வேலை செய்ய 30 நிமிடங்கள் எடுக்கும். சில நோயாளிகளில், இது ஒரு மணி நேரம் வரை ஆகலாம்.

First ever 7 minute cancer treatment jab to be rolled out in England sgb

இப்போது, புதிய மருந்து தோலுக்குக் கீழ் செலுத்தப்படுவதால் சுமார் 7 நிமிடங்களில் மருத்து வேலை செய்ய ஆரம்பித்துவிடும். அட்ஸோலிசுமாப் என்பது நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கும் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்து ஆகும். இது பெரியவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்ற சில வகை புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க தனியாகவோ அல்லது பிற கீமோதெரபி மருந்துகளுடனோ பயன்படுத்தப்படுகிறது.

மோனோக்ளோனல் ஆன்டிபாடியான இந்த மருந்து ஒருவரின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி புற்றுநோய் செல்களைக் கண்டுபிடித்து அழிக்க உதவுகிறது. இந்த மருந்தை ஜெனென்டெக் (Genentech) நிறுவனம் தயாரித்துள்ளது.

பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 3,600 நோயாளிகள் அட்சோலிசுமாப் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் புதிய ஊசியைச் செலுத்திக்கொள்ளத் தொடங்குவார்கள் மாறுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த ஊசிகயின் தாக்கம் என்னவாக இருக்கும்?

இந்த ஊசியை பயன்படுத்துவதால் நோயாளிகளுக்கு வசதியான மற்றும் விரைவான சிகிச்சையை வழங்க முடியும் எனவும் விரைவாக அதிக நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவியாக இருக்கும் எனவும் பிரிட்டனைச் சேர்ந்த புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் அலெக்சாண்டர் மார்ட்டின் சொல்கிறார்.

பிரிட்டன் தேசிய சுகாதார சேவை அமைப்புக்கும் மருந்து உற்பத்தி நிறுவனத்துக்கும் இடையே ஏற்கனவே உள்ள வணிக உடன்படிக்கையின் காரணமாக இந்த ஊசிக்காக கூடுதல் செலவு ஏற்படாது என்றும் சொல்லப்படுகிறது.

2021ஆம் ஆண்டில், ஃபெஸ்கோ என்ற மற்றொரு புற்றுநோய் சிகிச்சை முறை பிரிட்டனில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சிகிச்சையானது மார்பக புற்றுநோய் சிகிச்சை நேரத்தைக் குறைக்க வழிவகுப்பதுடன், நோயாளிகளின் உடல்நிலையிலும் விரைவான முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios