பொலிவியாவில் இருந்து 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. அதில், கால்பந்தாட்ட வீரர்கள் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலியாவில் இருந்து இன்று காலை விமானம் மெடலின் நகருக்கு புறப்பட்டது. அதில் 72 பயணிகள் பயணம் செய்தனர். இவர்களில் பிரேசில் நாட்டு கால்பந்தாட்ட வீரர்களும் அடங்கும் என கூறப்படுகிறது.
விமானம் கொலம்பியா அருகில் வானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானம் விழுந்து, நொறுங்கியது. இதில் உயிர் சேதங்கள் பற்றி தற்போது எவ்வித தகவலும் இல்லை.
