எகிப்து நாட்டைச் சேர்ந்த 36 வயதான பெண் வினோத நோயினால், உடல் எடை அதிகரித்து, கடந்த 25 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியேற முடியாமல் படுக்கையிலேயே இருக்கிறார். இவரின் எடை 500 கிலோவாக இருப்பதால், உலகின் மிக குண்டானபெண்ணாக கருதப்படுகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

எகிப்தில் உள்ள அலெக்சான்ட்ரியா நகரைச் சேர்ந்தவர் இமாம் அகமது அப்துலாடி(வயது36). இந்த பெண்தான் வினோத நோயினால் உடல் எடை அதிகரித்து அவதிப்பட்டு வருகிறார்.

பிறக்கும் போதை 5 கிலோ எடையில் இமாம் அகமது அப்துலாடி பிறந்தார், அதன்பின், தனது 11 வயதில் கடுமையாக உடல் எடை அதிகரித்து மற்ற குழந்தைகள் ஓடி, நடக்க முடியாமல் தவழத் தொடங்கினார். யானைக்கால் நோயும் சேர்ந்து கொண்டதையடுத்து இம்மாம் அகமதுவின் உடல் எடை அதிகரிக்கத் தொடங்கியது. 

இவரின் நோய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவிக்கையில், “ அப்துலாடியின் உடலில் நீரை அதிகமாக இழுக்கும் சுரப்பிகள் இருப்பதால் உடல் எடையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் எடை அதிகரித்து வருகிறது'' எனத் தெரிவித்தனர். 

இந்நிலையில், கடந்த 25 ஆண்டுகளாக வௌியில் எங்கும் நடமாட முடியாமல், கட்டிலில் படுத்த படுக்கையாக அப்துலாடி இருக்கிறார். இவரின் அன்றாட பணிகள், சாப்பாடு, உடைகளை மாற்றுவது, சுத்தம் செய்வது அனைத்தையும் தாயும், சகோதரி சாயாமா அப்துலாடி ஆகியோரும் செய்து வருகின்றனர்.