திருமண நிகழ்ச்சிகளில் பாடல் கச்சேரி நடத்துவது வளர்ந்து வரும் நாகரீகமாகத்தான் பார்க்கப்படுகிறது. அனைத்து நாடுகளிலும் இது போன்ற கொண்டாட்ட நிகழ்ச்சிகளை  நடத்துவதும் வழக்கமாகி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தானில், ஒரு திருமண நிகழ்ச்சி நாந்துள்ளது. இந்த திருமணத்தில், சமீனா சாமன் என்கிற 22 வயது பாடகி ஒருவர் பிரபலமான பாடல் ஒன்றை பாடினார். அவர் கீழே அமர்ந்து பாடியது பிடிக்காமல் ரசிகர் ஒருவர் அவரை எழுந்து நின்று பாடுமாறு கூறியுள்ளார். 

உடனே அந்த பாடகியும் எழுந்து நின்று பாடியுள்ளார். உடனே அந்த ரசிகர் எழுந்து நின்றாள் போதாது ஆட வேண்டும் என கூறியுள்ளார். 

சமீனா கர்பமாக இருந்த காரணத்தால், நடனமாடுவதை தவிர்த்துள்ளார். கோவம் தலைக்கேறிய அந்த ரசிகர் தன்னுடைய கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கண் இமைக்கும் நேரத்தில் சமீனாவின் நெஞ்சில் சுட்டார்.

அங்கிருந்தவர்கக்ள் உடனடியாக அவரை மருத்துவமனை அழைத்து சென்றும், இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.