இணையத்தில் வைரலாகிய ஜெட்லீ-ன் புகைப்படம்….!ஆக்ஷனில் கலக்கிய ஜெட்லீயா இப்படி ஆகிவிட்டார்…? சோகத்தில் ரசிகர்கள்…….!

famous Hollywood actors fans got shocked to see his latest picture
famous Hollywood actors fans got shocked to see his latest picture


சண்டைக்காட்சிகள் என்றாலே, எல்லோர் நினைவிற்கும் முதலில் வருவது ஜாக்கி சானும், ஜெட்லீயும் தான். கண் இமைக்கும் நேரத்தில், எதிரிகளை பந்தாடும் இவர்களின் வீர சாகசங்களுக்கு, உலகெங்கிலும் ரசிகர்கள் அதிகம். தங்கள் திறமையால் ஹாலிவுட் திரையுலகையே அசத்தியவர்கள் இந்த இருவரும்.

famous Hollywood actors fans got shocked to see his latest picture

இதில் ஜெட்லீயை சமீப காலமாக திரையில் காண முடியாமல், அவரது ரசிகர்கள் தவித்து போய் இருந்தனர். சமீபத்தில் ஜெட்லீயின் புகைப்படம் என்று சொல்லி ஒரு படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

அந்த புகைப்படத்தில் மிகவும் வயதான தோற்றத்தில் இருக்கும் நபரைக்காட்டி, இவர் தான் ஜெட்லீ என குறிப்பிட்டிருக்கின்றனர்.

famous Hollywood actors fans got shocked to see his latest picture

“ஹைப்பர் தைராய்டிஸம்” என்னும் நோயினால் ஜெட்லீ பாதிக்கப்பட்டிருப்பதாகவும், முதுகு தண்டுவடத்திலும் அவருக்கு பாதிப்பு இருப்பதாகவும், அதனால் தான் அவர் இப்படி ஆகிவிட்டார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார், அந்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் நபர்.

 

So, apparently, Jet Li is suffering from "hyperthyroidism and spinal problems" and this is him now ❤️😓: pic.twitter.com/Ss0W2EL96D

— simón (@StxNaty) May 19, 2018

ஜெட்லீ-ன் இந்த தோற்றத்தை நம்ப முடியாத அவரது ரசிகர்கள், இந்த புகைப்படத்தில் இருப்பது ஜெட்லீ அல்ல வேறு யாரோ, என கூறி வருகின்றனர்.  ஆனாலும் உண்மை என்ன என்பது, ஜெட்லீயே கூறினால் தானே தெரியும். என காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios