பேஸ்புக்கின் பெயர் மெட்டா என்று மாற்றப்பட்டு உள்ளதாக மார்க் ஜூக்கர்பாக் அறிவித்துள்ளார்.

பேஸ்புக்கின் பெயர் மெட்டா என்று மாற்றப்பட்டு உள்ளதாக மார்க் ஜூக்கர்பாக் அறிவித்துள்ளார்.

இன்றைய நவீன உலகில் சமூக வலைதளங்களில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது பேஸ்புக். இந்த பேஸ்புக் தளத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக பேஸ்புக் பயன்படுத்துவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேஸ்புக் பக்கம் முற்றிலும் முடங்கியது. அதனால் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனாளிகள் அதிருப்தி அடைந்தனர்.

தொழில்நுட்ப கோளாறு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந் நிலையில் பேஸ்புக்கின் பெயரை மாற்ற போவதாக தகவல்கள் வெளியாகி பயனாளர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தின.

இந் நிலையில் பேஸ்புக் பெயரை மாற்றிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் அறிவித்து இருக்கிறார். அதன்படி பேஸ்புக் இனி மெட்டா என்று மாற்றி உள்ளதாக அவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக மார்க் ஜூக்கர்பர்க் கூறி இருப்பதாவது:

சமூகத்தில் நிறைய பிரச்சனைகளை சந்தித்து அதில் இருந்து பலவற்றை கற்றுக் கொண்டோம். அதை அனைத்தையும் பயன்படுத்தி தற்போது புதியதொரு அத்தியாயத்தை தொடங்க வேண்டிய தருணம் இது. பெயர் மாற்றப்பட்டாலும் ஆப்கள், அவற்றின் பிராண்டுகள் மாறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மெட்டாவை தொடர்ந்து மெய்நிகர் உலகம் அல்லது விர்ச்சுவல் உலகத்தை உருவாக்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். அதாவது பேஸ்புக் நிறுவனமானது விஷூவல் ரியாலிட்டி, ஆக்மெண்ட் ரியாலிட்டி ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மெடாவெர்ஸ் என்கிற இணைய மாய உலகத்தை உருவாக்க இருக்கிறது.

இதற்கான கருவிகளை நாம் பயன்படுத்தி மெடாவெர்சி ஒருவரிடம் மற்ற நபர் எளிதாக தொடர்பு கொள்ள முடியும். முன்னதாக கூகுள் நிறுவனமாக 2016ம் ஆணடு தமது சந்தையை விரிவுபடுத்தி வேண்டி ஆல்பபெட் என்ற நிறுவனத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதற்கான 10 ஆயிரம் பேர்களை மெட்டாவெர்ஸ் பணிக்கு நியமித்து இருந்ததாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்து இருந்தது.

Scroll to load tweet…