உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறிவதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் கொரோனாவிற்கான ஆன்டிபாடி மருந்தை கண்டறிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றுநோயை 100 சதவீதம் தடுக்கக்கூடிய ஆன்டிபயாடிக் மருந்தை கலிபோர்னியா பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து உள்ளது. கலிபோர்னியாவில், சோரெண்டோ தெரபியூடிக்ஸ் பயோடெக் நிறுவனம்  அதன் எஸ்.டி.ஐ -1499 என்ற ஆன்டிபாடி மருந்து 100 சதவீதம் ஆரோக்கியமான மனித உயிரணுக்களில்கொரோனா வைரஸை நுழைவதைத் தடுத்தது பரிசோதனையில் தெரியவந்து உள்ளதாக கூறி உள்ளது.

சோரெண்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஒரு மாதத்திற்கு 200,000 டோஸ் ஆன்டிபாடியை உற்பத்தி செய்ய முடியும். அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் அவசர ஒப்புதலுக்காக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் சோரெண்டோவுக்கான பங்குகள் கிட்டத்தட்ட 220 சதவிகிதம் உயர்ந்துள்ளன. ஒரு சிகிச்சை இருக்கிறது என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். இது100 சதவீதம் வேலை செய்யும,  தீர்வு இருக்கிறது.கொரோனா வைரஸை இந்த மருந்து சுற்றி வளைக்கிறது. இது வைரஸைச் சுற்றிக் கொண்டு அவற்றை உடலில் இருந்து வெளியேற்றும்.

ஆன்டிபாடி ஒரு வைரஸை மனித உயிரணுக்களில் நுழைவதைத் தடுக்கும்போது, ​​வைரஸ் உயிர்வாழ முடியாது. வைரஸ் செல்லுக்குள் செல்ல முடியாவிட்டால், அதனால் நகலெடுக்க முடியாது. ஆகவே, வைரஸ் உயிரணுக்களைப் பெறுவதைத் தடுத்தால், வைரஸ் இறுதியில் இறந்துவிடும். உடல் அந்த வைரஸை வெளியேற்றுகிறது.  உங்கள் உடலில் நடுநிலையான ஆன்டிபாடி இருந்தால், உங்களுக்கு சமூக விலகல் தேவையில்லை. நீங்கள் பயமின்றி ஊரடங்கை  தளர்த்த முடியும். எஸ்.டி.ஐ-1499 என்பது கலவை ஆன்டிபாடியாக இருப்பதற்கான தெளிவான முதல் மருந்தாகும்

 

எங்கள் எஸ்.டி.ஐ -1499 ஆன்டிபாடி விதிவிலக்கான சிகிச்சை திறனைக் காட்டுகிறது, மேலும் தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பெற்றதைத் தொடர்ந்து உயிர்களைக் காப்பாற்ற முடியும்" என்று டாக்டர் ஜி கூறியுள்ளது. 

இந்த நிறுவனத்தின் ஆன்டிபாடி இன்னும் மக்களிடம்  சோதிக்கப்படவில்லை, எனவே இது மனித உடலுக்குள் எவ்வாறு நடந்து கொள்ளக்கூடும் மற்றும் அதன் சாத்தியமான பக்க விளைவுகள் முற்றிலும் தெரியவில்லை. உலகெங்கும் பல ஆராய்ச்சிக்குழுக்கள் கோவிட்-19க்கான தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் உள்ளது. பல நிறுவனங்கள் தயாரித்து விட்டோம் எனக் கூறினாலும் இதை யாரும் இப்போது வரை உறுதிப்படுத்தவில்லை.