இதை நிறுத்தாவிட்டால், கொள்ளை நோய்கள் படையெடுப்பை தடுக்க முடியாது.!! தலையில் அடித்துக் கதறும் ஆராய்ச்சியாளர்கள்

குரங்குகள் மற்றும் சிம்பன்ஸிகள் புஷ்மீட் வர்த்தகம் மூலம் எச்.ஐ.வி மனிதர்களுக்கு பரவியது ,  இப்போது  குதிரைகால் குளம்பு வௌவால்களிலிருந்து  பாங்கோலின் மூலம் கோவிட்- 19 வந்ததாக தெரிகிறது , 

environment researchers alert to stop forest destroying and animal hunting

வன விலங்குகள் வேட்டையாடப்படுவதையும் , காடுகள் அழிக்கப்படுவதையும் நிறுத்தாவிட்டால் இன்னும் பல மோசமான தொற்று நோய்கள் மனித சமூகத்தை தாக்கும் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர் , கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் இதை அவசர எச்சரிக்கையாக முன்வைக்கின்றனர்.  சீனாவின் வுஹான் சந்தையில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது  இந்தக் கொடிய வைரஸ் விலங்குகளிடம் இருந்து தான் மனிதர்களுக்கு பரவியது என ஊகிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களும் பேராசிரியர்களுமான ஜோசப் செட்டேல், சாண்ட்ரா தியாஸ் மற்றும் எட்வர்டோ ப்ரோண்டிஜியோ, டாக்டர் பீட்டர் தாஸ்ஸாக் ஆகியோருடன் இணைந்து பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் தொடர்பான இடை- அரசு அறிவியல்-கொள்கை தளத்திற்கு (ஐபிபிஇஎஸ்) ஒரு கட்டுரையை எழுதியுள்ளனர், அதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன,  அதாவது,   தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் எபோலா ரேபீஸ் அல்லது பறவைக்காய்ச்சல் என புது புது தொற்று நோய்கள் மனித சமூகத்தை தாக்கி வருகிறது.

environment researchers alert to stop forest destroying and animal hunting

இதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து காடுகள் அழிக்கப்படுவதும் காடுகளை விவசாயத்திற்காக கட்டற்று விரிவாக்கம் செய்வதும்,  காடுகளில் சுரங்கம் அமைப்பது மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக காடுகளை அழித்து அதில் உள்ள உயிரினங்களை வேட்டையாடுதல் போன்றவற்றின் மூலம் விலங்குகளிடமிருந்து மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது .  கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் புதிய தொற்று நோய்கள் மூலமாக 7 லட்சம் பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர் ,  இயற்கை பாதுகாக்கப்படாவிட்டால் விலங்குகளிடமிருந்து மனிதர்கள் தனிமைப்படாவிட்டால் அடுத்தடுத்து இன்னும் பல மோசமான கொள்ளை நோய்கள் படையெடுக்கக் கூடும் என அவர்கள் எச்சரிக்கின்றனர் ,  அதுமட்டுமின்றி காடழிப்பு காலநிலை மாற்றத்தால் அபாயங்கள் பல அதிகரித்து வருகின்றன . மக்கள் இப்போது மழைக்காடுகளை கூட ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டனர்,  அதன்மூலம் அருவெறுப்பான , கொடூர உயிரினகளுடன்  மனிதர்களுக்கு தொடர்பு ஏற்படுகிறது ,  பின்னர் மனிதர்கள் அந்த விலங்குகளை வேட்டையாடி பெரிய நகரங்களுக்கு கொண்டு வருகின்றனர், 

environment researchers alert to stop forest destroying and animal hunting

பின்னர் அது சந்தைகளில் விற்கப்படுகிறது   இப்படி அரியவகை விலங்குகளுடன் மனிதர்களுக்கு தொடர்பு ஏற்படும்போது இது மோசமான அபாயங்களை  ஏற்படுத்துகிறது ,   இப்படி 60 சதவீதத்திற்கும் மேலான தொற்று மற்றும் கொள்ளை நோய்கள் விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்கு பரவியுள்ளன , காட்டு விலங்குகளின் சட்டவிரோத வேட்டையாடுதல்களை உடனே முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் இன்னும் பல மோசமான விளைவுகளை மனித சமூகம் சந்திக்க நேரிடும் , வௌவால்களிலிருந்து சிவெட்ஸ் பூனைகள் வழியாக சார்ஸ்  பரவியது ,   குரங்குகள் மற்றும் சிம்பன்ஸிகள் புஷ்மீட் வர்த்தகம் மூலம் எச்.ஐ.வி மனிதர்களுக்கு பரவியது ,  இப்போது  குதிரைகால் குளம்பு வௌவால்களிலிருந்து  பாங்கோலின் மூலம் கோவிட்- 19 வந்ததாக தெரிகிறது ,  இன்னும் பல கொடிய  நோய்கள் பரவுவதைத் தடுக்க வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது நிறுத்த வேண்டுமென எச்சரித்துள்ளனர்.  "மொசாம்பிக்கில் வேட்டையாடும் கும்பல்கள் அண்டை நாடான தென் ஆப்பிரிக்காவில் உள்ள க்ரூகர் வனப்பகுதியில் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர் . குறிப்பாக காண்டாமிருக வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

environment researchers alert to stop forest destroying and animal hunting

அதேபோல் போட்ஸ்வானாவில் ஊரடங்கை பயன்படுத்தி இதுவரை ஆறு காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளன , வடமேற்கு தென்னாப்பிரிக்காவில் லாக்டவுனைப் பயன்படுத்தி இதுவரை ஒன்பது காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளன, இப்படி காண்டாமிருகங்கள் தொடர்ந்து வேட்டையாடப் படுவதால் அதன் குட்டிகள் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன,  இதனால் ஒரு இனமே அடியோடு அழியும் நிலைக்கு ஆளாகிறது ,  இதன் மூலம் உணவுச்சங்கிலி துண்டிக்கப்படுவதுடன், கொடிய நோய்க் கிருமிகளை உண்டாக்கும் உயிரினங்கள் தலைதூக்கும்  வாய்ப்பு அதிகம் உள்ளது.   தற்போது சீனா மற்றும் வியட்நாமில் இருந்து இது போன்ற விலங்குகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதால்  வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது அதிகரித்துள்ளது,  தற்போது கொரோனா வைரஸ் எச்சரிக்கையால் சீனா அந்நாட்டில் வனவிலங்குகள் விற்பனைக்கு தடை விதித்திருக்கிறது ,  ஆனாலும் கள்ளச் சந்தைகளில் விற்பனை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது,  இனியும்  வன விலங்குகள் வேட்டையாடப்படுவது நிறுத்தப்படாவிட்டால்,  கொள்ளை நோய்கள் கொடிய தொற்று நோய்கள் படையெடுப்பு தடுக்க முடியாததாகி விடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.  

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios