இந்த வைட்டமின் மட்டும் இருந்தால் போதும் கவலைப்பட தேவையில்லை..!! இங்கிலாந்து விஞ்ஞானிகள் சொன்ன குட் நியுஸ்..!
குறிப்பாக வைட்டமின் டி அதிக அளவில் சூரிய கதிர்கள் மூலம் கிடைக்கிறது , அமெரிக்க விஞ்ஞானிகளும் சமீபத்தில் தங்கள் ஆராய்ச்சிகள் மூலம் வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களை கொரோனா அதிகம் தாக்குவதாக கண்டறிந்துள்ளனர்.
சூரிய ஒளி மற்றும் நல்ல காற்றோட்டம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் என இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அவசர கால அறிவியல் ஆலோசனை குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ஆலன் பென் தெரிவித்துள்ளார் . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது , இந்த வைரசில் இருந்து தப்பித்துக்கொள்ள இது தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் , பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பலவேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன . கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க சமூக இடைவெளியும் ஊரடங்கும் மட்டுமே ஒரே வழி என உலகம் முழுதும் இது கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கருத்தை கூறியுள்ளார் . சமீபத்தில் இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்த்தப் பட்டுள்ள நிலையில் மக்கள் பூங்காக்களுக்கும் மைதானங்களுக்கும் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர் . இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் ஆலன் பென் , சூரிய ஒளி மற்றும் நல்ல காற்றோட்டத்தால் வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்று கூறியுள்ளார் .
மேலும் இது குறித்து தெரிவித்துள்ள அவர் , சூரிய ஒளியும் நல்ல காற்றோட்டமும் வைரஸில் இருந்து நம்மை பாதுகாப்பதாக அறிவியல் கூறுகிறது , அதாவது இந்த வைரஸ் பரவல் மூன்று வழிகளில் நடைபெறுகிறது , நீர்த் திவலைகள் மூலம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுகிறது . அதனால்தான் இரண்டு மீட்டர் இடைவெளியில் நிற்க வேண்டும் என்கின்றனர் . இந்த வைரஸ் காற்று மண்டலத்தில் மிதந்து மற்ற பொருட்களின் மீது படிவதாக கூறப்படுகிறது , எனவே ஒரு வீட்டுக்குள் நெருக்கமாக அடைந்து கிடப்பதை விட பரந்து விரிந்த பூங்கா , மைதானங்களில் இருப்பதன் மூலம் வெகுவாக ஆபத்தை குறைக்க முடியும் . உள்ளிருப்பதைவிட வெளியில் இருப்பது குறைந்த ஆபத்தை ஏற்படுத்தும் என பேராசிரியர் பென்னின் கருத்தை பல விஞ்ஞானிகளும் ஆதரித்துள்ளனர் . லண்டனின் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் வல்லுநர்கள் வைரஸின் துகள்கள் புதிய காற்றால் நீர்த்துப்போகும் என்று கூறியுள்ளனர் .
மேலும் புற ஊதா ஒளி வைரஸை அழிக்க உதவும் என்றும் தெரிவித்துள்ளனர், நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்களில் நிபுணரான பேராசிரியர் கீத் நீல் ஆலன் பென்னின் கருத்தை ஒப்புக் கொண்டுள்ளார். மொத்தத்தில் வீட்டிற்குள் இருப்பதை விட வெளியில் இருப்பது பாதுகாப்பானது என்பதை விஞ்ஞானிகள் முற்றிலும் ஒப்புக்கொண்டுள்ளனர் . வெளியில் இருப்பதன் மூலம் நாம் இன்னும் கூட விலகி இருக்க முடியும் , வெளியில் இருப்பதை விட உள்ளே இருக்கும் போது வைரஸ் உயிர் வாழ்வதற்கு அது உகந்ததாக இருக்கிறது என்கிறனர். பேராசிரியர் நீல் கூற்றின்படி சூரிய ஒளியில் புற ஊதாக் கதிர் வீச்சு அதிகம் உள்ளது இது டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ- வை சேதப்படுத்துகிறது , எனவே இது கொரோனா வைரஸ் கிருமிகளை அது வேகமாக பாதிக்கிறது , சூரிய ஒளியில் இருக்கும்போது அந்த வைரஸ்கள் புற ஊதா ஒளியால் சேதமடைகிறது என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வைட்டமின் டி அதிக அளவில் சூரிய கதிர்கள் மூலம் கிடைக்கிறது , அமெரிக்க விஞ்ஞானிகளும் சமீபத்தில் தங்கள் ஆராய்ச்சிகள் மூலம் வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களை கொரோனா அதிகம் தாக்குவதாக கண்டறிந்துள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய வாடி பிளாக்மேன் டி வைட்டமின் குறைபாடு கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது .எனவே வைட்டமின் டி குறித்த விழிப்புணர்வு நமக்கு அவசியம் எனக் கூறியுள்ளார் . எனவே வைட்டமின் டி சுவாச வைரஸ் தொற்று அபாயத்தை குறைக்கிறது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன , மேலும் வைட்டமின் டி குறைபாடு நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன என தெரிவித்துள்ளனர். குளிர்காலத்தில் உடலில் வைட்டமின் டி அளவு குறைவாக உள்ளது மேலும் உள்ளே தங்கியிருப்பவர்கள் இதே பிரச்சனைக்கு ஆட்படுகின்றனர் எனபதே இந்த ஆய்வுக் குழுவின் கூற்று.