போரிஸ் ஜான்சன் வெண்டிலேட்டர் இல்லாமல் சுவாசிக்கிறார்..!! பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி..!!
அவசர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசிப்பதாகவும் தகவல்கள் பரவியது. அது ஒட்டுமொத்த இங்கிலாந்து மக்களையும் கவலையில் ஆழ்த்தியது உலக நாடுகளின் தலைவர்கள் அவரது உடல்நலம் குறித்து பதறியடித்து விசாரிக்க ஆரம்பித்தனர்,
இங்கிலாந்து பிரதமர் மோரிஸ் ஜான்சன் நல்ல உடல் நிலையுடன் உள்ளதாகவும், அவர் நல்ல மன உறுதியுடன் உள்ளதாகவுல் இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது , கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது , அந்த வைரஸ் இங்கிலாந்தையும் விட்டுவைக்கவில்லை , ஏழை பணக்காரன் இன்றி வாய்ப்பு கிடைப்பவர்களை எல்லாம் தனது கொடூர வலைக்குள் வீழ்த்தும் கொரோனாவுக்கு உலக அளவில் பல அரசியல் தலைகளும் ஆட்பட்டு வருகின்றனர். இந்நிலையிஇல் இந்த வைரஸுக்கு சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கடுமையாக பாதிக்கப்பட்டார் , பின்னர் அதிலிருந்து அவர் மெல்ல மீண்டு வந்துள்ள நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது . இதனையடுத்து திடீரென அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாக அறிவித்தார். டாவுனிங் வீதியில் உள்ள அரசு இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர்,
10 தினங்களுக்கும் மேலாக தனிமையில் இருந்தார் . அப்போது வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், இங்கிலாந்து மக்கள் அரசு சொல்லும் கட்டுப்பாடுகளை பின்பற்றி கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் , இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இருந்து நாம் விரைவில் விடுபடுவோம் என தெரிவித்த அவர் , அரசின் திட்டங்களுக்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரியிருந்தார், அப்போது தனது உடல்நிலை குறித்து தெரிவித்திருந்த அவர், தனக்கு வைரஸ் அறிகுறிகள் தென்படுகிறது ஆனாலும் விரைவில் குணமடைந்து உங்களை சந்திப்பேன் என கூறினார், இந்நிலையில் திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் , மருத்துவர்களின் அறிவுரைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக தகவல் தெரிவித்தது, இந்நிலையில் அவர் கடுமையான மூச்சு திணறலுக்கு ஆளாகி இருப்பதாகவும்,
அவசர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசிப்பதாகவும் தகவல்கள் பரவியது. அது ஒட்டுமொத்த இங்கிலாந்து மக்களையும் கவலையில் ஆழ்த்தியது உலக நாடுகளின் தலைவர்கள் அவரது உடல்நலம் குறித்து பதறியடித்து விசாரிக்க ஆரம்பித்தனர், இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா அறிகுறி மோசமடைந்ததால் அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார் என்பது உண்மைதான் , ஆனால் அவர் நல்ல மன உறுதியுடன் உள்ளார் , இயல்பாக சுவாசிக்கிறார் , அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என்றும், அவர் விரைவில் மீண்டு வருவார் என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது, இந்த தகவல் இங்கிலாந்து மக்களை ஓரளவுக்கு ஆறுதல் அடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.