சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வென்டிலேட்டர்களை பயன்படுத்துவதன் மூலம் நோயாளிகள் இறப்பதற்கும் அல்லது  அவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவதற்கும்  வாய்ப்பிருக்கிறது என இங்கிலாந்தின் முன்னணி மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர் .  சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வென்டிலேட்டர்கள் ஒழுங்கற்ற ஆக்சிஜன் சப்ளை கொண்டதாக இருப்பதால் அது மருத்துவமனைகளில் பயன்படுத்துவதற்கு உகந்ததாக இல்லை என மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் .  ஏற்கனவே   சீன பொருட்களின் தரம் குறித்து இத்தாலி , ஸ்பெயின், போன்ற நாடுகளுடன் இந்தியாவும் புகார் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பிரிட்டனும் அதே புகாரை முன் வைத்துள்ளது.   உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது  லட்சக்கணக்கான மக்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி கூட்டம் கூட்டமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் அவர்களுக்கு  சிகிச்சை வழங்க ஏராளமான மருத்துவ உபகரணங்கள் தேவை ஏற்பட்டுள்ளதால்  சீனா ,  தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து மற்ற நாடுகளுக்கு அம்மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.  இந்நிலையில் சீனாவிடமிருந்து புதிதாக  300 வென்டிலேட்டர்களை இங்கிலாந்து  இறக்குமதி  செய்துள்ளது . அவைகள்  மருத்துவமனைகளில் பயன்படுத்துவதற்கு உகந்ததாக இல்லை  மீறி பயன்படுத்துவதன் மூலம்  நோயாளிகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.  அல்லது அது அவர்களுக்கு  மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது என  மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர் . இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்காமில் உள்ள மருத்துவமனையின் மூத்த மயக்க மருந்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்,  மற்ற நாடுகளைப் போல இங்கிலாந்தும் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது ,

 

மருத்துவ உபகரணங்களை பொருத்தவரையில் சீனாவில் இருந்தே அனைத்து உபகரணங்களும் இறக்குமதி செய்யப்படுகிறது ,  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுமார் 300 வென்டிலேட்டர்கள்  சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இந்த இயந்திரங்கள் இங்கிலாந்துக்கு  வந்தபோது  மிகுந்த ஆரவாரத்துடன்  ராணுவ தளத்தில் இறக்கப்பட்டது , சீன அரசாங்கம் தங்களுக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி என பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் மூத்த உறுப்பினர் மைக்கேல்  கோவ்,  சீனாவுக்கு நன்றி தெரிவித்தனர். ஆனால் ஒன்பது நாட்களுக்குப் பிறகு மூத்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மேலாளர் குழு தங்களுக்கு கிடைத்த வென்டிலேட்டர்கள் குறித்து  புகார் கூற தொடங்கியுள்ளனர்,  சீனாவின் முக்கிய வென்டிலேட்டர் உற்பத்தியாளர்களில் ஒருவரான பெய்ஜிங் ஏயன்மெட் கோ லிமிடெட் தயாரித்த ஷாங்க்ரிலா 510 மாடல்.
 வென்டிலேட்டர்கள் தரம் குறைந்ததாக உள்ளது,

 

இவற்றில்  ஆக்சிஜன் வழங்கல் முறையாக இல்லை ,  அதன் தயாரிப்பு மற்றும் தரம் திருப்திகரமாக இல்லை,   ஒரு அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிக்கு சிகிச்சை வழங்கும் அளவுக்கு  அதன் செயல்பாடுகள் இல்லை ,  அதுமட்டுமில்லாமல் இது பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லை , தற்போதுள்ள அவசர அவசியத்துக்கு  பயன்படுத்துவதற்கு தகுதியற்றதாக உள்ளது என புகார்களை அடுக்கிக் கொண்டே செல்கின்றார் அவர், மேலும்  இது மொத்தத்தில் முற்றிலும் தவறான இயந்திரம்,  இது அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனை படுக்கை அறையில் இருப்பதை விட ஆம்புலன்ஸ்களில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒன்று , எனவே  நிபுணர்குழு  இதை உடனே  பரிசீலிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

தற்போது வென்டிலேட்டர் விவகாரம் இங்கிலாந்து அரசு மீது  கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது .  சீனாவிலிருந்து மொத்தம் எத்தனை வென்டிலேட்டர் களுக்கு ஆர்டர் செய்யப்பட்டது ,  இதுகுறித்து மூத்த மருத்துவர்களிடத்தில் ஆலோசிக்கப்பட்டதா.?  எந்த அடிப்படையில் இந்த வென்டிலேட்டர்கள்  தேர்வு செய்யப்பட்டன. என எதிர்க்கட்சிகள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  ஐரோப்பிய நாடுகள் தொடங்கி சீனாவுக்கு மிக அருகில் உள்ள இந்தியா வரை சீனா பொருட்களின் தரம் குறித்து புகார் தெரிவித்துள்ள நிலையில் இப்போது இங்கிலாந்தும்  சீனாமீது மிகுந்த அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளது.