New York Flood : கடும் மழை.. வெள்ளத்தில் மூழ்கிய நியூயார்க் நகரம்.. அவசர நிலை பிரகடனம் - ஆளுநர் அறிவிப்பு!
Emergency Declared in New York : நியூயார்க் நகரில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்துவந்த நிலையில், அந்த நகரமே தற்போது வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. இந்நிலையில் அந்த நகர ஆளுநர் அங்கு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். கனமழை காரணமாக சுரங்கப்பாதைகள், சாலைகள் மற்றும் கட்டிடங்களின் அடித்தளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ஒரு மாத கால அளவிற்கு பெய்ய வேண்டிய மழை, இன்று வெள்ளிக்கிழமை காலை வெறும் மூன்று மணி நேரத்தில் புரூக்ளின் பகுதிகளில் பெய்ததால், அங்கு சுமார் 4 அங்குலத்திற்கு மேல் மழை நீர் சேர்ந்துள்ளது. நியூயார்க் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு 1 முதல் 2 அங்குலம் வரை கடுமையான மழை பெய்துள்ளது.
நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் இன்று வெள்ளிக்கிழமை காலை வெளியிட்ட செய்தி அறிக்கையில், "இது ஒரு ஆபத்தான வானிலை நிலை மற்றும் அது இன்னும் முடிவடையவில்லை" என்று தெரிவித்துள்ளார்.ஆகவே மக்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் மக்கள் அனைவரையும் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள்.. 150 இடங்களில் மிரட்டல்.. போலீசிடம் வசமாக சிக்கிய இளைஞர் !!
நியூயோர்க் நகர கவர்னர் கேத்தி ஹோச்சுல், நியூயார்க் நகரப் பகுதியில், சாலைகள், அடித்தளங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அவசர நிலையை அறிவித்தார். மேலும் தேசிய வானிலை சேவை நியூயார்க் நகரம் முழுவதும் "கணிசமான" திடீர் வெள்ள சேத அச்சுறுத்தல் பற்றி எச்சரித்ததுள்ளது.
புரூக்ளின் மற்றும் மெட்ரோ-நார்த் பகுதியின் பல வழித்தடங்களுக்கான சுரங்கப்பாதை சேவை வெள்ளம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் விமானங்கள் பறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், லாகார்டியா சர்வதேச விமான நிலைய முனையத்தை தற்காலிகமாக மூடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க் நகர பகுதியில் சுமார் 8.5 மில்லியன் மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் உள்ளார்கள் என்பது குறிபிடத்தக்கது. குயின்ஸில் உள்ள ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 10 மணி வரை சுமார் 1.19 அங்குல மழை பெய்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை அன்று விடுக்கப்பட்டுள்ள இந்த வெள்ள அச்சுறுத்தல், வடகிழக்கு பகுதி முழுவதும் சுமார் 25 மில்லியன் மக்களை பாதிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது, மேலும் நியூயார்க் டிரை-ஸ்டேட் பகுதி 4 "மிதமான" ஆபத்தில் 3 ஆம் நிலை எச்சரிக்கையின் கீழ் உள்ளது என்று தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது.
சிங்கப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு! கடந்த ஆண்டை விட 5% அதிகரிப்பு!