elon musk: ட்விட்டரை வாங்கும் எலான் திட்டத்தை ஏற்க முடியாது: சவுதி இளவரசர் மறுப்பு: கேள்வி எழுப்பிய மஸ்க்

elon musk : ட்விட்டரின்அனைத்துப் பங்குகளையும் முழுமையாக வாங்கிக் கொள்வதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்துள்ளதை ஏற்க முடியாது என்று சவுதி அரேபிய முதலீட்டாளரும் இளவரசருமான அல்வாலீத் பின் தலால்தெரிவித்துள்ளார்.

elon musk : Saudi prince rejects Elon Musks Twitter takeover bid

ட்விட்டரின்அனைத்துப் பங்குகளையும் முழுமையாக வாங்கிக் கொள்வதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்துள்ளதை ஏற்க முடியாது என்று சவுதி அரேபிய முதலீட்டாளரும் இளவரசருமான அல்வாலீத் பின் தலால்தெரிவித்துள்ளார்.

4100 கோடி டாலர்

ட்விட்டர் சமூக வலைதளத்தை 4,100 கோடி டாலருக்கு வாங்கிக்கொள்வதாக டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் நேற்று  விருப்பும் தெரிவித்திருந்தார். 

elon musk : Saudi prince rejects Elon Musks Twitter takeover bid

மறுப்பு

ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு வாங்க விரும்புவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். சமீபத்தில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை விலைக்கு வாங்கினார். இதன் மூலம் அதிகமாக பங்குகளை வைத்திருக்கும் தனிநபர் என்ற பெருமையைப் பெற்றார். ஆனால், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் அழைப்பு விடுக்கப்பட்டபோது, அதில் இணைவதற்கு எலான் மஸ்க் மறுத்துவிட்டார்.

மறுப்பு

இந்நிலையில் சவுதி அரேபிய முதலீட்டாளர் அல்வாலீத் ஏறக்குறைய 5.2 சதவீதப் பங்குகளை ட்விட்டர் நிறுவனத்தில் வைத்துள்ளார். இதன் மதிப்பு 100 கோடி டாலராகும். 

elon musk : Saudi prince rejects Elon Musks Twitter takeover bid

டெஸ்லா நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் விடுத்த கோரிக்கையை ஏற்க முடியாது என ட்விட்டர் பங்குதாரர்களில் ஒருவரான அல்வாலீத் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 டாலருக்கு வாங்குவேன் என எலான் மஸ்க் கூறியது ட்விட்டர் நிறுவனத்தின் வளர்ச்சி, வாய்ப்புகளை கருத்தில் கொண்டு கூறியதுஎன நான் நம்பவில்லை. ட்விட்டர் நிறுவனத்தில் நீண்டகாலம், மிகப்பெரிய பங்குதாரரான கேஹெச்சி மற்றும் நானும் மஸ்கின் திட்டத்தை ஏற்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் கேள்வி

சவுதி அரேபிய முதலீட்டாளர் அல்வாலீத் தெரிவித்த கருத்துக்கு, டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் பதிலடி கொடுத்து இரு கேள்விகளை எழுப்பியுள்ளார். எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ட்விட்டர் நிறுவனத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் சவுதி அரேபிய அரசு எவ்வளவு சொந்தமாக்கி வைத்துள்ளது. பத்திரிகையாளர் கருத்துச் சுதந்திரம் குறித்து சவுதிஅரேபியா அரசகுடும்பத்தில் நிலைப்பாடு என்ன.” எனக் கேட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios