உக்ரைன் தான் பந்தயம்... ஒத்தைக்கு ஒத்த மோதலாமா? புடினை சீண்டும் எலன்மஸ்க்!!
ஒத்தைக்கு ஒத்தையாக மோத ரஷ்யாவுக்கு எலன்மஸ்க் அழைப்பு விடுத்துள்ளார்.
ஒத்தைக்கு ஒத்தையாக மோத ரஷ்யாவுக்கு எலன்மஸ்க் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து 19 ஆவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் பல கட்டிடங்கள் உருகுலைந்தன. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் நாள்தோறும் தீவிரம் அடைந்து வருகிறது. உக்ரைனை சுற்றி வளைத்த ரஷ்யா, தற்போது தலைநகர் கீவை நெருங்கி உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில், கியேவின் புறநகர்ப் பகுதியில் சண்டை கடுமையாகியுள்ளது. தலைநகரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பீரங்கித் தாக்குதல்கள் தொடரும் நிலையில், மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளி நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மேலும் பலர் பதுகிடங்களில் பாதுக்காப்புக்காக தங்கியுள்ளனர். நேற்று லிவிவ் நகரில் உள்ள ராணுவ தளத்தில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
லிவிவ் நகரிலிருந்து 25 மைல் தொலைவில் உள்ள யாவோரிவ் ராணுவப் பயிற்சி மைதானம் குண்டுவீச்சில் சேதமடைந்திருக்கிறது. தலில் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, கடந்த சில நாட்களாக மேற்குப் பகுதி நகரங்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. மேற்கு எல்லை வழியே, போலந்து மூலம் போர்த் தளவாடங்களையும் ஆயுதங்களையும் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு அனுப்பி வருகின்றன. இதை அடுத்து உக்ரைனின் மேற்குப் பகுதி நகரங்கள் மீது ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் லிவிவ் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது ரஷ்யா போர் விமானங்கள் மூலம் குண்டு வீசியதில் 35 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 60 பேர் காயமடைந்துள்ளதாக லிவிவ் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனில் உள்ள மகபேறு மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ரஷ்யாவை ஒத்தைக்கு ஒத்தை மோத எலன்மஸ்க் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவரது இந்த சவாலுக்கு உக்ரனை பந்தயமாக வைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.