Earthquake: மலேசியா, பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. அலறியடித்துக்கொண்டு வெளியேறிய பொதுமக்கள்.!

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 504 கிலோ மீட்டர் தொலைவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவானதாக நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது.  

Earthquake of magnitude 6.3 strikes Philippines

மலேசியா தலைநகர் கோலாம்பூரில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவாகியுள்ளது. 

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 504 கிலோ மீட்டர் தொலைவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவானதாக நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது.  இந்த சக்தி வாயந்த் நிலநடுக்கத்தால்  வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறிஅடித்து கொண்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். 

Earthquake of magnitude 6.3 strikes Philippines

பொதுமக்கள் பீதி

அதேபோல், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 157 கிலோ மீட்டர் தொலைவில் லூசன் தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் இது 6.4ஆக பதிவாகி உள்ளது. இதனால், பொதுமக்கள் பீதி அடைந்து கொண்டு சாலையில் தஞ்சம் அடைந்தனர். ஆனால், இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Earthquake of magnitude 6.3 strikes Philippines

இந்த நிலநடுக்கம் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதவிவரங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. 2004ம் ஆண்டு டிசம்பரில் சுமித்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உருவான ஆழி பேரலை தமிழக கடற்கரை பகுதியில் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios