சுமத்திரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா? இப்பொது நிலவரம் என்ன?

Earthquake in Sumatra Island : சுமத்ரா தீவில் வடக்கு பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Earthquake of 5.9 magnitude struck north of Sumatra island white color warning ans

சுமத்திரா தீவின் வடக்கு பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் ‘வெள்ளை’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டு வருகின்றது. 

இன்று டிசம்பர் 30ம் தேதி காலை 10.49 மணியளவில், வடக்கு சுமத்ராவுக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தியா மற்றும் இலங்கைக்கு எந்தவித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

அட கொடுமையே! புகைப்படத்தில் வளர்ப்பு மகனை நீக்க 'ஐடியா' கேட்ட மாற்றாந்தாய்..! 

தீவைச் சுற்றியுள்ள கரையோரங்களில் வசிப்பவர்கள் இது தொடர்பான அறிவிப்புகள் குறித்து அடிக்கடி அறிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை இது தொடர்பான அனைத்து சமீபத்திய தகவல்களும் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெறும் போது ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பெரும் வெள்ளம் முதல் புடின் படுகொலை வரை : பாபா வாங்கா முதல் ஓஷோ வரை, 2024க்கான கணிப்புகள்..

கடலுக்கு அடியில் சுமார் 10.0 கிமீ ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம், முதலில் 2.54 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 93.13 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் ஏற்பட்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரிய அளவில் எச்சரிக்கைகள் இல்லை என்றாலும் மக்கள் விழுப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios