ஜாவா தீவில் பயங்கர நிலநடுக்கம் !! சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொது மக்கள் பீதி !!!

earthquake in jawa island...tsunami warning
earthquake in jawa island...tsunami warning


இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகளில்  ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால்  பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர். ரிக்டர் அளவில் 6.5 என பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கடலோரத்தில் வசித்து வந்த அனைவரும் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறினர்.

earthquake in jawa island...tsunami warning

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

earthquake in jawa island...tsunami warning

நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை.  கடலுக்கடியில் சுமார் 91 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கம் சுமார் 20 நொடிகள் உணரப்பட்டது என தெரிவித்த அதிகாரிகள் அதிகாலை 2.30 மணியளவில் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.

கடலோரப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பலாம் என தெரிவித்துள்ள அதிகாரிகள். இருப்பினும் தங்கள் வீடுகள் பாதுகாப்பாக இல்லையென்றால் தற்காலிக குடில்களில் தங்கி கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios