ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 40 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டன. இதனால் நகர் முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. டோட்டோரி பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 அலகுகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் யுரிஹாமா நகரில் வீடு இடிந்து விழுந்தது. குரயோஷி நகரில் பலர் காயமடைந்தனர். சில இடங்களில் தீவிபத்து ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அதிர்ச்சியால் இந்த நகரம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இங்குள்ள சுமார் 40 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் இவ்வழியாக செல்லும் புல்லட் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மூடப்பட்டு இருக்கும் அணுஉலைகளுக்கு இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை. சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்படவில்லை.