அமொிக்க அதிபராக டிரம்ப் நாளை பதவியேற்பு!
ஒபாமாவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதையாெட்டி, அமெரிக்காவின் 45வது அதிபதியாக டொனால்டு டிரம்ப் நாளை பதவி ஏற்கிறார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் 8 ஆண்டு வெள்ளை மாளிகை வாசம் முடிவுக்கு வருகிறது. அமெரிக்காவின் 44-ஆவது அதிபராக, மிகவும் சிக்கலான சர்வதேசச் சூழலில், எட்டாண்டுகள் பதவி வகித்த பராக் ஒபாமா இன்றுடன் விடைபெறுகிறாா்.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
அவர் வாஷிங்டனில் நாளை நடக்க உள்ள பிரமாண்ட விழாவில் அந்த நாட்டின் 45-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.
அவர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கிற விழா, ‘மீண்டும் அமெரிக்காவை மாபெரும் நாடாக்குவோம்’ என்ற பொருளில் கொண்டாடப்படுகிறது.
டிரம்ப் பதவி ஏற்பு விழாவுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பதவி ஏற்பு விழாவை நேரில் காண்பதற்காக வாஷிங்டனில் அமெரிக்கர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகின்றனர். இந்திய வம்சாவளியினரும் திரளாக குவிகின்றனர்.
