சி.என்.என் தொலைக்காட்சி செய்தியாளருடன் டிரம்ப் கடும் வாக்குவாதம்!
அமொிக்க அதிபர் தோ்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், செய்தியாளா்கள் சந்திப்பின்போது, கேள்வி கேட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்,
அமெரிக்க அதிபராக டாெனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். வரும் 20ம் தேதி அவா் முறைப்படி அதிபராக பதவியேற்கவுள்ளாா்.
டொனால்ட் டிரம்ப் ரஷ்யா சென்றிருந்தபோது, பாலியல் தொழிலாளர்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும், அந்த வீடியோ ரஷ்ய உளவுத்துறை வசம் இருப்பதாக கூறி சி.என்.என் தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதனை பகிரங்கமாக டிரம்ப் மறுத்தாா்.
இந்நிலையில், நியூயார்க்கில் டொனால்ட் டிரம்ப் பேட்டியளித்தபோது, சி.என்.என் தொலைக்காட்சியின் செய்தியாளர் ஜிம் அகோஸ்டா, கேள்வி கேட்க முற்பட்டார்.
அப்போது அவரை தடுத்தி நிறுத்திய டொனால்ட் டிரம்ப், உங்களது நிறுவனம் ஒரு பயங்கரவாத நிறுவனம், நீங்கள் கேள்வி கேட்காதீர்கள் என்று தெரிவித்தார்.
அதையும் மீறி செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்று டொனால்ட் டிரம்ப் மறுத்துவிட்டார்.
பின்னர் பேசிய டிரம்ப், பார்வையாளர்களை அதிகரிப்பதற்காக ஆதாரமற்ற தகவலை சி.என்.என் வெளியிடுவது பரிதாபகரமானது என்றும் விமர்சித்தார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:58 AM IST