அமெரிக்காவில் பிற நாட்டவர் மீது ட்ரம்ப் கோபம்... விசா தடை விதித்து சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப அதிரடி!
அமெரிக்க நாட்டு மக்களுக்கு சிகிச்சையளிக்க முடியாத அளவுக்கு அந்நாடு திண்டாடிவருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மக்களின் மீது அமெரிக்க அரசின் கோபம் திரும்பியுள்ளது. வெளி நாட்டுக்காரர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் தங்கியிருப்பதும், அவர்களைச் சம்பந்தப்பட்ட நாடுகள் அழைக்காமல் இருப்பதும் ட்ரம்ப் அரசுக்கு கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது. எனவே அமெரிக்காவில் வசிக்கும் பிற நாடுகளைச் சேர்ந்த மக்களை திரும்ப அழைக்காத நாடுகளுக்கு டிசம்பர் 31 வரை விசா தடை விதித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள வெளிநாட்டு மக்களை திரும்ப அழைக்காத நாடுகளுக்கு விசா தடை விதித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
உலகையே அச்சுறுத்திவரும் வரும் கொரோனாவால் வல்லரசான அமெரிக்கா ஆடிப்போய் உள்ளது. உலகிலேயே அந்நாட்டில்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 5.34 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20,600 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கையிலும், உயிரிழப்பு எண்ணிக்கையிலும் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலையில் இருந்துவருகிறது. ஒரே நாளில் மட்டும் அமெரிக்காவில் 31 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
அமெரிக்க நாட்டு மக்களுக்கு சிகிச்சையளிக்க முடியாத அளவுக்கு அந்நாடு திண்டாடிவருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மக்களின் மீது அமெரிக்க அரசின் கோபம் திரும்பியுள்ளது. வெளி நாட்டுக்காரர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் தங்கியிருப்பதும், அவர்களைச் சம்பந்தப்பட்ட நாடுகள் அழைக்காமல் இருப்பதும் ட்ரம்ப் அரசுக்கு கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது. எனவே அமெரிக்காவில் வசிக்கும் பிற நாடுகளைச் சேர்ந்த மக்களை திரும்ப அழைக்காத நாடுகளுக்கு டிசம்பர் 31 வரை விசா தடை விதித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க அரசின் உத்தரவில், “அமெரிக்காவில் பிற நாட்டைச் சேர்ந்தவர்கள் விதிமீறல்களில் ஈட்டுபடுகிறார்கள். விதி மீறுவோரை அவர்களுடைய சொந்த நாட்டுகே திருப்பி அனுப்புவதில் அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை செயலாளர்கள் உறுதியோடு இருக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.