தீவிரவாதிகளை எல்லாம் மோடி பார்த்துக்குவாரு !! கெத்தாக பேசிய டொனால்டு டிரம்ப் !!
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளை பிரதமர் மோடி கவனித்துக்கொள்வார் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று முன்தினம் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.
சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக இன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெர்ரெஸ் ஏற்பாடு செய்திருந்த உலக பருவநிலை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாடினார். இந்த மாநாட்டிற்கு பின்னர் ஐ.நா. சபையிலேயே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி பேசும்போது, ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்றதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதிபர் டொனால்டு டிரம்ப் எனக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே நல்ல நண்பர்” என தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் , நாங்கள் வர்த்தகத்தை சிறப்பாக செயல்படுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். குறுகிய காலத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் புதிய உச்சம் தொடும் என தெரிவித்தார்.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் பயற்சி முகாம்கள் செயல்பட்டு வருகிறது என்ற அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியது தொடர்பான கேள்விக்கு," இந்த பிரச்சனையை பிரதமர் மோடி கவனித்துக் கொள்வார் என டிரம்ப் அதிரடியாக தெரிவித்தார்.