கொரோனாவுக்கு ஆண்களை ரொம்ப பிடிக்குமாம்...? ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் 3 முக்கிய காரணங்கள்..!
சீனாவில் பிறப்பிடமான கொரோனா வைரஸ் தொற்றால் 3,285 பேர் இறந்துள்ளனர். இதில் ஆண்கள் எண்ணிக்கை பெண்களைக் காட்டிலும் இரு மடங்கு அதிகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் இத்தாலியில் இறந்தவர்களை ஆண்கள் 71 சதவீதம், ஸ்பெயின் கொடுத்த புள்ளி விவரத்தின் படி பெண்களை காட்டிலும் ஆண்களே இரு மடங்கு அதிகம் இறந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பவர்களில் 65 வயது கடந்தவர்கள் அதிகம் என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்றாகும். ஆனால், இறப்பவர்களில் ஆண்கள்தான் அதிகம் என்கிறது தற்போதிய புள்ளிவிவரம்.
சீனாவில் பிறப்பிடமான கொரோனா வைரஸ் தொற்றால் 3,285 பேர் இறந்துள்ளனர். இதில் ஆண்கள் எண்ணிக்கை பெண்களைக் காட்டிலும் இரு மடங்கு அதிகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் இத்தாலியில் இறந்தவர்களை ஆண்கள் 71 சதவீதம், ஸ்பெயின் கொடுத்த புள்ளி விவரத்தின் படி பெண்களை காட்டிலும் ஆண்களே இரு மடங்கு அதிகம் இறந்துள்ளனர்.
கொரோனாவுக்கும் ஆண்கள் மீது அப்படி என்ன விருப்பம்?
ஆனால், இந்த கேள்விக்கு உறுதியான விடை கிடையாது என்கிறார் உலக பாலின மருத்துவ மைய பேராசிரியர் சாரா ஹாவ்கிஸ். ஆனால், கொரோனா தொற்றுக்கு அதிக ஆண்கள் சாவதற்கு மூன்று காரணங்களைச் சொல்ல முடியும் என்கிறார்.
1. கொரோண வைரஸின் சொர்க்கபுரி நுரையீரல் தான். ஆண்கள்தான் சிகரெட் புகைப்பவர்களாக இருக்கிறார்கள். சீனாவை பொறுத்தவரை 50 சதவீதம் ஆண்கள் புகைபிடிப்பவர்கள், பெண்கள் 2 சதவீதம் பேர் மட்டுமே இந்த பழக்கத்திற்கு ஆளானவர்கள். இத்தாலியில் இன்னும் மோசம் 78 சதவீதம் ஆண்கள் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். ஆரோக்கியமில்லாத நுரையீரல் கிடைத்தால் கொரோனா அல்வா சாப்பிடுவது போல.
2. ஆண்களுக்கு சுத்தம் கிடையாது. கைகளை அடிக்கடி கழுவ மாட்டார்கள். வெளியிடங்களுக்கு போய் வீட்டுக்கு வந்தால் உடனே சுத்தம் செய்ய மாட்டார்கள். ஆடையை புதிதாக மாற்ற மாட்டார்கள்.
3. பெண்கள் பெண்களுக்கு 2 எக்ஸ் குரோமோசோம். ஆண்களுக்கு ஒரு எக்ஸ் குரோமோசோம் மட்டுமே. இதனால் மட்டுமே இதனால் பெண்களுக்கு இத்தகைய வைரஸை எதிர்க்கும் சக்தி அதிகம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.