Asianet News TamilAsianet News Tamil

ஐ.நா. வரலாற்றில் முதல்முறையாக தீபாவளி கொண்டாட்டம் - விளக்கு ஏற்றி வாழ்த்துச் சொல்லப்பட்டது

diwali in-un
Author
First Published Oct 31, 2016, 6:16 AM IST


நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் முதல்முறையாக தீபாவளி நேற்று முன் தினம் வண்ணமயமாகக் கொண்டாடப்பட்டது.

அங்கு தீபாவளியைக் குறிக்கும் வகையில் ஐ.நா. கட்டிடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தீபம் ஒளிரவைக்கப்பட்டு அனைவருக்கும் வாழ்த்துக் கூறப்பட்டது. ஐ.நா.வில் தீபாவளி இம்மாதம் 29- முதல் 31-ந் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.

ஐ.நா. சபையில் தீபாவளி வாழ்த்துச் செய்தி அறிவிக்கப்பட்டவுடன் அதை வெளியிட்டு இந்தியாவுக்கான தூதர் அக்பரூதீன் டுவிட்டரில் செய்தி வெளியிட்டார். அதில், “ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். ஐ.நா. சபையில் தீபாவளி முதல்முறையாகக் கொண்டாடப்பட்டது. விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிர்கிறது. இந்த முயற்சி  எடுத்த ஐ.நா. தலைவர் பீட்டர் தாம்சனுக்கு நன்றி'' எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், ஐ.நா. சபைக் கட்டிடத்தில் தீப ஒளி ஏற்றப்பட்டு இருந்த புகைப்படங்கள், வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த கட்டிடங்களின் புகைப்படங்கள் ஆகியவற்றையும் அக்பரூதீன் டுவிட்டரில் வெளியிட்டார்.

diwali in-un

ஐ.நா. தலைவர் பீட்டர் தாம்சன் வெளியிட்ட செய்தியில், “ பிரகாசமான நீல வண்ணத்தில் தீப ஒளி இருக்கிறது.  இருளை விளக்கி ஒளி வந்துள்ளது. விரக்தி ஒழிந்து நம்பிக்கை பிறக்கட்டும், அறியாமை விலகி அறிவு பிறக்கட்டும்'' எனத் தெரிவித்திருந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதமே தீபாவளிப்பண்டிகையின் முக்கியத்துவத்தை உணர்த்தி, கொண்டாடப்பட வேண்டும் என ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐ.நா. உறுப்பு நாடுகள் பெரும்பாலானவற்றில் தீபாவளி கொண்டாடப்படுவதால், தீபாவளியன்று, கூட்டம் நடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

கடந்த ஜூனில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடம் சிறப்பு மின்விளக்கு அலங்காரத்தில் காட்சி அளித்தது. இந்நிலையில், முதல் முறையாக இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios