கண்டுபிடிக்கப்பட்டது மருந்து... பரிசோதனையில் அபார வெற்றி... நான்கே நாட்களில் கொரோனாவை விரட்டியடித்து மோட்சம்.!
60 பேரிடம் இந்த சோதனை நடந்துள்ளது. 60 பேரும் வெற்றிகரமாக கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தற்போது அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை, மேலும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி உருவாக்க 12-18 மாதங்கள் ஆகலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா இன்க் நிறுவனத்தின் ஒரு பரிசோதனை தடுப்பூசி, கொரோனா வைரஸைத் தடுக்க ஒரு நோயெதிர்ப்பு அமைப்பு நடவடிக்கையை உருவாக்க முடியும் என்பதற்கான அறிகுறிகளைக் காட்டி உள்ளது, மேலும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான உலக அளவிலான முயற்சியில் தற்காலிக நம்பிக்கையை அளிக்கிறது.
இந்நிலையில் சில நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யும் முறை தொடங்கி உள்ளது. கொரோனாவை 4 நாட்களில் குணப்படுத்தும் இரட்டை மருந்து கலவையை கண்டறிந்திருப்பதாக வங்கதேச மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். வங்கதேசத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த தரெக் ஆலம் என்ற மருத்துவரின் தலைமையிலான குழு கொரோனா குறித்து ஆய்வு செய்து வந்தனர். இவர்கள் மருத்துவத் துறையில் பரவலாக பயன்படுத்தப்படும் ஐவர்மெக்டின் மற்றும் டாக்ஸிசைக்ளின் ஆகிய மருந்துகளை கலந்து, கொரோனா நோயாளிகளுக்கு அளித்து சோதித்துள்ளனர்.
60 பேரிடம் இந்த சோதனை நடந்துள்ளது. 60 பேரும் வெற்றிகரமாக கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மருந்து கொடுத்த 4 நாட்களில் குணமடைந்திருப்பதாகவும், 4வது நாளில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று முடிவுகள் கிடைத்திருப்பதாகவும் மருத்துவ குழு கூறி உள்ளது. இந்த மருந்து கலவையை பயன்படுத்தியதால், பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சர்வதேச அங்கீகாரத்தை பெறுவதற்கான நடவடிக்கையை மருத்துவக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர். ஆக மொத்தத்தில் விரைவில் கொரோனா தொற்று விரட்டியடிக்கப்படும் என்கிற நம்பிக்கை எழுந்துள்ளது.