பிரபல சாப்ட்வேர் நிறுவனமான , மைக்ரோ சாப்ட் நிறுவனம் வரும் ஜூன் மாதத்துக்குள் 2,850 பணியாளர்களை நீக்குவது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.

முதல்கட்டமாக 700 பணியாளர்களை நீக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இதற்கு முன்னதாக சுமார் 2,850 பணியாளர்கள் நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்த பணியாளர்கள் :

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 1,13,000 பணியாளர்கள் இருக் கின்றனர்.இந்நிலையில், லிங்க்ட்இன் இணைய தளத்தில் 1,600 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்பது குறிபிடத்தக்கது. அதே சமயத்தில் பலரை வேலையை விட்டு நீக்கியும் வருகிறது.

குறிப்பாக புதிதாக பொறுப்பேற்றுள்ள சத்யா நாதெள்ளா, பல முறை பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது. மேலும், கடந்த நிதி ஆண்டில் மட்டும் ஸ்மார்ட்போன் பிரிவில் 7,400 பணியாளர்களை நீக்கி இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்