வேகமெடுக்கும் டெல்டாக்ரான் வைரஸ்... சீனாவை தொடர்ந்து அமேரிக்காவிலும் பீதி!!

சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத்தொடங்கிய நிலையில், அமெரிக்காவில் டெல்டாக்ரான் என்ற வைரஸ் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

DeltaCron virus is spreading rapidly in the United States

சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத்தொடங்கிய நிலையில், அமெரிக்காவில் டெல்டாக்ரான் என்ற வைரஸ் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவியது. இதை அடுத்து அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதை அடுத்து கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனிடையே சீனாவில் அண்மை காலங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தது. இந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால் சீனாவில் செய்வதறியாது தடுமாறி வருகிறது. சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், அக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா மீண்டும் தலைதூக்கிய நிலையில், அமெரிக்காவில் டெல்டாக்ரான் என்ற வைரஸ் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உலகம் முழுவதும் புதிய அலையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

DeltaCron virus is spreading rapidly in the United States

உலகின் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சீனாவைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சீனாவில் தினசரி பாதிப்பு இருமடங்காக அதிகரித்து வருவதால், கிட்டத்தட்ட 3 கோடி மக்கள் ஊரடங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் வௌியிட்ட அறிக்கையில், டெல்டாக்ரான் வைரஸ் தொற்றுகள் உலகம் முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன என்று தெரிவித்துள்ளது.

DeltaCron virus is spreading rapidly in the United States

எனவே, டெல்டாக்ரான் வைரஸ் தொற்று பரவல், உலகம் முழுவதும் புதிய அலையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் 1 முதல் மார்ச் 10 வரையிலான காலகட்டத்தில், அமெரிக்கா முழுவதும் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 10 ஆம் தேதி வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, தற்போதைய எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் ஒமைக்ரானின் உருமாற்றம் அடைந்த வைரஸ் வேகமாக பரவுகிறது. அதன் துணையான பிஏ.2 வைரசும் அதிகரித்து வருகின்றன. மேலும் அமெரிக்காவில் 10 சதவீத பாதிப்புகள் பிஏ.2 மற்றும் பிஏ.2 ஒமிக்ரானை விட 30 சதவீதம் வேகமாக பரவுவதால், நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது. டெல்டாக்ரான் வைரஸ் தொற்று அமெரிக்காவின் சில பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. இது ஒரு புதிய அலையை ஏற்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios