சீனாவில் வெகுவாக குறைந்த உயிரிழப்பு..!! கொஞ்ச கொஞ்சமாக வலுவிழந்த கொரோனா..!!
அதேபோல பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 ,793 ஆக உயர்ந்துள்ளது . அதாவது ஜனவரி மாதத்திற்கு பின்னர் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது . புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது .
சீனாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3169 ஆக உயர்ந்துள்ளது , நேற்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது . சீனாவின் வூகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி ஏராளமான மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது . சீனாவில் மட்டுமல்லாது நூற்றுக்கும் அதிகமான நாடுகளுக்கு இது பரவி உள்ளது . குறிப்பாக இத்தாலி , ஈரான் , தென்கொரியா , ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கம் கடுமையாக உள்ளது.
இதற்கிடையில் உலக சுகாதார நிறுவனம் கொரோனாவை கொள்ளை நோயாக அறிவித்துள்ளது . கரோனா வைரஸ் வீரியம் குறைந்துள்ள காரணத்தினால் சீனாவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது என சீன நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனாலும் வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது . கரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று மட்டும் 11 பேர் பலியாகினர் . இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 3,169 ஆக உயர்ந்துள்ளது .
அதேபோல பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 ,793 ஆக உயர்ந்துள்ளது . அதாவது ஜனவரி மாதத்திற்கு பின்னர் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது . புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது . உகான் நகரில் நேற்று புதிதாக 8 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 4 ,627 பேர் பலியாகியுள்ளனர் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.