வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மரணம்... உறுதிப்படுத்தும் தகவல்கள்..!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மரணம் அடைந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Death of North Korean President Kim Jong Un ... Confirming Information

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மரணம் அடைந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக, வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் பொது வாழ்க்கையிலிருந்து காணாமல் போனது அவரது உடல்நிலை குறித்த பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது. அவரது தனது சகோதரி கிம் யோ ஜாங்கிடம் சில அதிகாரங்களை ஒப்படைத்துள்ளார் என்று வெளியான தகவல்கள் அந்த சந்தேகங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்தது. தற்போது கிம் ஜாங் உன் மரணமடைந்து விட்டதாக உறுதியாகக் கூறப்படுகிறது.Death of North Korean President Kim Jong Un ... Confirming Information

கடந்த, 2011ல் வட கொரிய அதிபராக பொறுப்பேற்ற கிம் ஜங் உன் சில மாதங்களாக, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு, 'கோமா'வில் உள்ளதாக, தகவல் வெளியானது. இதை, தென்கொரியாவின் மறைந்த அதிபர் கிம் டே ஜங்கின் முன்னாள் உதவியாளர் ஒருவரும் உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால், சில நிகழ்ச்சிகளில் கிம் ஜங் உன் பங்கேற்றது போன்ற படங்கள் வெளியானதை அடுத்து, குழப்பம் நீடித்தது.

இந்நிலையில், வட கொரியாவில் பத்திரிகையாளர் என்ற முறையில், பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ள, ராய் காலி, கிம் ஜங் உன், மரணம் அடைந்து விட்டதாக கூறியுள்ளார். ‘’வட கொரியாவில் என்ன நடக்கிறது என்பது, அந்நாட்டு மக்களுக்கே தெரியாது. அந்த அளவிற்கு அரசு, ரகசியங்களை காப்பாற்றுகிறது. எனக்கு தெரிந்தவரை சில காலம் உடல் நலமின்றி இருந்த, கிம் ஜங் உன் மரணம் அடைந்து விட்டார்.

Death of North Korean President Kim Jong Un ... Confirming Information

வட கொரியாவில் வழக்கமாக, ஒரு அதிபர் உடல் நிலை பாதித்தாலோ அல்லது நிர்வாகத்தை நடத்த முடியாத சூழல் ஏற்படும் போதுதான், அதிகாரத்தை அடுத்தவர் கைக்கு மாற்றுவர். கிம் ஜங் உன், தன் அதிகாரங்களில் சிலவற்றை சகோதரிக்கு மாற்றியதில் இருந்து, அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது ஊர்ஜிதமானது. தற்போது, அவர் மரணம் அடைந்து விட்டதாகவே கருதுகிறேன்’எனத் தெரிவித்துள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios