மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்,மாரடைப்பு காரணமாக  உயிருக்கு ஆபத்தான நிலையில் கராச்சியில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.

மும்பையில் கடந்த , 1993ல் ஆம் ஆண்டு நிகழ்ந்த  தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில், 257 பேர் கொல்லப்பட்டனர்; 1,000த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம், சவுதி அரேபியாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, பின்னர் பாகிஸ்தான் அரசிடம் தஞ்சம் அடைந்தான்.

ஆனால் கராச்சி நகரில் ரகசியமாக வசித்து வருவதாக இந்தியா கூறும் குற்றச்சாட்டை, பாகிஸ்தான்  அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மும்பை குண்டு வெடிப்பு உட்பட, பல்வேறு வழக்குகளிலும், தாவூத் இப்ராஹிம் தேடப்பட்டு வருகிறான்.

இந்நிலையில், மாரடைப்பு காரணமாக, கராச்சியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் தாவூத் இப்ராஹிம் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் அவனது உடல்நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இத்தகவலை அவனது கூட்டாளி சோட்டா சாஹில் மற்றும் அவனது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். அதே நேரத்தில் தாவூத் நிலைமையை இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தொடந்து கண்காணித்து வருகின்றனர்.

மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் மூலம் பலரது ஹார்ட்டை நிறுத்திய தாவூது இப்ராஹிமின் ஹார்ட் தற்போது ஆபத்தான சிலையில் உள்ளது.