எபோலா வைரசை அழிக்கும் மருந்து பல்வேறு விதமான சோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோயாக எபோலா வைரஸ் விளங்குகிறது. மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2016 வரை இந்த நோய்க்கு சுமார் 11 ஆயிரத்து 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த நோய்க்கு எதிரான மருந்து தற்போது கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் சார்பில் எபோலா வைரஸுக்கு எதிரான இந்த மருந்தை கண்டறிய பல்வேறு பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எபோலா நோய் பாதிக்கப்பட்ட சிலருக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டு 10 நாட்களுக்குள் இந்த நோயின் தாக்கம் முற்றிலும் குறைந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் துணை இயக்குனர் marie-paule kieny தெரிவித்துள்ளார். மேலும் இந்த நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகளில் விரைவில் இந்த மருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
