தெருக்களில் கிருமிநாசினி தெளிப்பது சுத்த வேஸ்ட்.. கொரோனா வைரஸ் சாகாது.. உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்.!
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினியை மக்கள் மீது தெளிக்க வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினியை மக்கள் மீது தெளிக்க வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்த நிலையில் 46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில நாடுகளில் கிருமி நாசினி தெருக்களில் தெளிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், கிருமிநாசினி கொரோனா வைரசை அழிக்காது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக உள்ள சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மேற்பரப்புகளை சுத்தம் செய்தல் என்ற அடிப்படையில் கிருமிநாசினி சில நாடுகளில் தெளிக்கப்படுகிறது. ஆனால், அந்த முறையால் பயனில்லை. வீதிகள் அல்லது சந்தைகள் போன்ற இடங்களில் கிருமிநாசினி தெளிப்பதால் வைரஸ் அல்லது பிற நோய்க்கிருமிகள் தொற்று நோய்களின் இருப்பிடம் தெருக்களோ நடைபாதைகளோ அல்ல. கிருமிநாசினியை வெளியே தெளிப்பது மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.கிருமிநாசினி தெளிப்பது தொடர்பாக உலக சுகாதார சிறுவனம் எவ்வித பரிந்தரையும் கூறவில்லை.
இது உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தீங்கு விளைவிக்கும். பாதிக்கப்பட்ட நபர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பதால் அந்த நீர்த்துளிகளின் அல்லது தொடர்பு மூலம் வைரஸைப் பரப்பும் திறனைக் குறைக்காது.மக்கள் மீது குளோரின் அல்லது பிற நச்சு ரசாயனங்கள் தெளிப்பதால் கண் மற்றும் தோல் எரிச்சல், மூச்சு குழாய் அழற்சி ஏற்படுத்தும். பல நாடுகள் மேற்கொண்ட ஆய்வு அடிப்படையின்படி நேரடியாக கிருமிநாசினியை தெளிப்பது சரியான தீர்வாக இருக்காது. கிருமி நாசினி நனைக்கப்பட்ட துணியால் குறிப்பிட்ட இடத்தை துடைக்கவேண்டும். கொரோனா கிருமிகள் உடலில் மேற்பரப்பிலிருந்து தொற்ற வாய்ப்புள்ளதால் அவ்வாறு செய்யலாம். இருப்பினும் அதுவும் கூட வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோருக்கு பரிந்துரைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.