covid in china: உஷார்! சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஹாங்காங்கில் 27ஆயிரம் பேர் பாதிப்பு

covid in china:  சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில்இல்லாத வகையில் அங்கு ஒரே நாளில் 2ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தலைநகர் பெய்ஜிங்கில்மட்டும் 20 பேருக்கு பாஸிட்டிவ் உறுதியாகியுள்ளது

covid in china:  China's daily COVID19 cases hit 2-year high

சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில்இல்லாத வகையில் அங்கு ஒரே நாளில் 2ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தலைநகர் பெய்ஜிங்கில்மட்டும் 20 பேருக்கு பாஸிட்டிவ் உறுதியாகியுள்ளது

கடந்த 2 ஆண்டுகளில் இதுபோல் மொத்தமாக யாரும் கொரோனாவில் பாதி்க்கப்பட்டதில்லை என்பதால் பெய்ஜிங் நகரம் உஷார் படுத்தப்பட்டுள்ளது. 

covid in china:  China's daily COVID19 cases hit 2-year high

கொரோனா அதிகரிப்பு

சீன தேசிய சுகாதார அமைப்பு கூறுகையில் “ சீனாவின் உள்ளூர் மக்கள் மட்டும் நேற்று 1807 பேருக்கு கொரோனா பாஸிட்டிவ் உறுதியானது, 131 பேர் வெளிநாடிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. 

இதில் ஜிலின் மாகாணத்தில் மட்டும் 1412 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நகரில்தான் முழுமையாக ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சாங்சங் நகரிலும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஷான்டாங் நகரில் 62 பேர், ஷான்க்ஸி நகில் 39 பேர், ஜியாங்சு நகரில் 23 பேர், தியான்ஜென் நகரில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்  உஷார்

பெய்ஜிங் நகரில் ஒரே நாளில் 20பேருக்கு கொரோனா உறுதியானது. இவர்களுடன் தொடர்புடைய மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் ஹாங்காங் நகரில் மட்டும் 27,647 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

covid in china:  China's daily COVID19 cases hit 2-year high

சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும்அதிகரித்து வருவதையடுத்து, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தஅரசு உத்தரவிட்டுள்ளது. பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் மக்கள் தேவையின்றி வெளியேறத் தடை விதி்க்கப்பட்டுள்ளது. நிறுவனங்களில் பணியாற்றுவோர் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக தலைநகர் பெய்ஜிங் நகரம் மிகுந்த உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் கூடுதல் பாதிப்பு

ஹாங்காங்கில் மட்டும் நேற்று ஒரே நாளில் 27,600 பேருக்கும் அதிகமாக கொரோனா தொற்று உறுதியானது. இதனால், ஷாங்காய் நகரிலிருந்து மக்கள் வெளியேறத் தடைவிதி்க்கப்பட்டுள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

covid in china:  China's daily COVID19 cases hit 2-year high

எச்சரிக்கை

புதிய தொற்று பரவிவருவதால் மக்கள் தலைநகரை விட்டு வேறு எந்தநகருக்கும்செல்லக் கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 
ஹாங்காங் தலைமை நிர்வாக அதிகாரி கேரி லாம் விடுத்த எச்சரிக்கையில் “ புதிய வைரஸ் பரவி வருகிறது. மக்கள் தலைநகரை விட்டு வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வைரஸ் உச்சமடையாமல் இருக்க கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும். உச்ச நிலையைக் கடந்துவிட்டோம் எனக் கூற முடியாது. எச்சரிக்கையுடன் ஒவ்வொரு முடிவையும் எடுக்கிறோம். கொரோனா தொற்று அதிகரித்தால் லாக்டவுனைத் தவிர வேறு வழியில்லை” எனத் தெரிவித்தார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios