வெப்பநிலை அதிகரித்தாலும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரசால் 198 உலக நாடுகளும் பீதி அடைந்துள்ளனர்.  தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உயிரிழப்பும், பாதிப்பும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரை உலக முழுவதும் 70,000 பேர் உயிரிழந்துள்ளனர். 13 லட்சம் சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டாலும், இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ருத்ரதாண்டவம் ஆடிவருகிறது. அதேபோல், இந்தியாவில் 4,067 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.  இதுவரை 109 பேர் உயிரிழந்துள்ளனர், 292 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் ஏப்ரல் மாதம் சராசரியாக 32 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். மேலும், மே மாதம் கோடை வெயில் ரொம்ப உக்கரமாக இருக்கும்.  இந்த வெப்பத்திற்கு கொரோனா வைரஸ் நீண்ட நாள் இருக்காது. நாம் அதை கட்டுப்படுத்திவிடலாம் என்று சமூக வலைதளங்களில் பேச்சுகள் எழுந்தன. 

இந்நிலையில், இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அதில், வெப்பநிலை அதிகரித்தாலும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பநிலை அதிகம் உள்ள நாடுகளில் கொரோனா தாக்கம் உள்ளது என கூறியதால் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.