Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவால் அடிபட்டு அலறும் நாடுகளுக்கு குறி... போர் தொடுக்க வீராப்பு காட்டும் தெனாவெட்டு நாடுகள்..!

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருக்கும் பாகிஸ்தானுக்கு உதவுவதன் மூலம் அங்கு ஊடுருவி இந்தியாவுக்கும் செக் வைக்க சீனா முயற்சிக்கிறது. 

Countries that are hit by Corona
Author
Chiang Rai, First Published Apr 8, 2020, 4:11 PM IST

கொரோனா வைரஸ் தொற்றை பயன்படுத்தி நிறைய நாடுகள் மற்ற நாடுகள் மீது போர் தொடுக்க வாய்ப்புகள் இருக்கிறது. எல்லா நாடுகளும் பொருளாதார ரீதியாக அடிபட்டு கிடக்கும் போது ’இவனை அடித்தால் இவன் வழிக்கு வந்துவிடுவான்’ என மற்ற நாடுகள் திட்டம் போட்டு வருகின்றன. குறிப்பாக ஈரான் ஈராக் மீது அமெரிக்கா எப்போதும் போர் தொடுக்கலாம்  என்கிற அளவில் உள்ளது.Countries that are hit by Corona

ஏமன் நாடு மீது  சவுதி அரேபியா கண் வைத்துள்ளது. கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏமன் நாட்டினர் கடந்த ஒரு வாரத்திற்குள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற செய்திகளும் வெளியாகியிருக்கிறது. ஆனால், இதெல்லாம் கொரோனா  செய்திக்கு முன் தூசி போல கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

Countries that are hit by Corona

தென்சீனக் கடலில் வியட்நாம் படகை சீனா முறியடித்தது. அதற்கு சீனா சொல்லும் காரணம், அமெரிக்காவின் போர் விமானம் வியட்நாமிற்கு கடந்த மார்ச் 30ஆம் தேதி சென்றது. அதற்கு அமெரிக்கா,  வியட்நாமிற்கு மருந்து பொருட்களை கொடுக்க போகிறோம் என காரணம் சொன்னது. ஆனால், அமெரிக்க விமானம் வியட்நாமிற்கு சென்றது சீனாவிற்கு பிடிக்கவில்லை. ஆகையால், வியட்நாமின் படகை சீன அடித்து நொறுக்கி உள்ளது. இந்த விவகாரத்தில் ஜப்பானும் நுழைய நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. வியட்நாமில் தன்னுடைய ஆதிக்கம் இருக்க வேண்டும் என ஜப்பான் முயற்சிக்கிறது.

Countries that are hit by Corona

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று ஜப்பான். ஊரடங்கு உத்தரவுக்கு பின் உலக அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதில் பாகிஸ்தான் நிலைமையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதேபோல பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருக்கும் பாகிஸ்தானுக்கு உதவுவதன் மூலம் அங்கு ஊடுருவி இந்தியாவுக்கும் செக் வைக்க சீனா முயற்சிக்கிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios