உலக நாடுகளை அசைத்த கொரோனா..! பலி எண்ணிக்கை தாறுமாறாக உயர்வு..!
தற்போது 3,189 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இத்தாலியில் 1,266 பேரும், ஈரானில் 611 பேரும், ஸ்பெயினில் 191 பேரும் கரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த 2,404 பேரையும் சேர்த்து, உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 5,593-ஆக உயர்ந்துள்ளது.
சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது 3,189 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இத்தாலியில் 1,266 பேரும், ஈரானில் 611 பேரும், ஸ்பெயினில் 191 பேரும் கரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த 2,404 பேரையும் சேர்த்து, உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 5,593-ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் தற்போது இந்தியாவிலும் கொரோனா நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 100க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களையும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா பீதி காரணமாக விமான பயணங்கள் பெருமளவில் குறைந்துள்ளன.
உலகம் முழுவதும் தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளன. கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.