ஸ்ரீ கைலாசாவில் கொரோனாவா..? வாலண்டரியாக மூக்குடைபட்ட நித்யானந்தா..!
ஈக்குவடாரிலும் கொரோனா பரவியுள்ளது. கைலாசாவில் எத்தனை இறப்புகள்..? அங்கே புதைப்பதற்கான இடம் இல்லையா?
உலகம் முழுவதும் 13 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் 4 ஆயிரத்து 700 பேர் கோவிட்-19 பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 400 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், நித்யானந்தா விவகாரத்தை மறந்து விட்டனர். அவரை பிடிக்க சர்வதேச போலீஸ் உதவியை போலீசார் நாடிய நிலையில், புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து நித்யானந்தாவை தேடும் பணி நடந்து வந்தது அப்டேட் இல்லாமல் அமுங்கிக் கிடக்கிறது.
இந்நிலையில் நித்யானந்தா அவ்வப்போது தானும் லைம் லைட்டில் இருப்பதாக அவ்வப்போது டவிட்டரில் வந்து மூக்கை நுழைத்துச் செல்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் தனது 'ட்விட்டர்' பக்கத்தில் "கொரோனா வைரசால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. இது எதிர்காலத்திலும் எங்களுக்கு வராது. ஏனென்றால் பரமசிவன் எங்களைப் பாதுகாக்கிறார். காலபைரவர் எங்களுக்கு பாதுகாவலாக உள்ளார்" எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது, ’’என் தாய் தேசத்தின் தலைநகரம் இதில் எது? தனியார் இடம், ஒரே இடம், மர்மஇடம் ஸ்ரீ கைலாஷ் என நான்கு ஆப்சன்கள் கொடுத்து வாக்களிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதற்கு கேள்வி கேட்டுள்ள நெட்டிசன் ஒருவர், ‘’ எப்படி இருக்கீங்க. ஈக்குவடாரிலும் கொரோனா பரவியுள்ளது. கைலாசாவில் எத்தனை இறப்புகள்..? அங்கே புதைப்பதற்கான இடம் இல்லையா?’’ எனக் கேள்வி கேட்டு அதிரடித்துள்ளார்.