அனுமன் லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல மோடி எங்களை காப்பாற்ற வேண்டும்.. பிரேசில் அதிபர் உருக்கம்..!

ராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரேசில் அதிபர் ஜேர் போல்செனாரோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Coronavirus... With mentions of Ramayana, sanjeevani booti, Brazilian President Bolsonaro writes to PM Modi

அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜேர் போல்செனாரோ கூறியுள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் வழங்க இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் வழங்கியது. இதனால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்  மாத்திரைகள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதனை ஏற்றுமதி செய்ய கடந்த மாதம் 25ம் தேதி மத்திய அரசு அதிரடியாக தடைவிதித்து. 

Coronavirus... With mentions of Ramayana, sanjeevani booti, Brazilian President Bolsonaro writes to PM Modi

ஆனால், இந்தியாவிடம் மிகப்பெரிய அளவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்கா ஆர்டர் செய்திருந்தது. மத்திய அரசின் தடையால் அந்த மாத்திரைகள் அமெரிக்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் பிரதமர் மோடியிடம் தடையை விலக்கும்படி அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடியும் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார். ஆனால், அமெரிக்காவில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. 

Coronavirus... With mentions of Ramayana, sanjeevani booti, Brazilian President Bolsonaro writes to PM Modi

இதனால், கடுப்பான அதிபர் டிரம்ப் மருந்துகள் கிடைக்கவில்லையெனில் அதற்கான பதிலடி தரப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியிருந்தார். இதனைடுத்து, உடனே இந்தியாவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் போதுமான அளவு இருப்பில் உள்ளதால் கொரோனா அதிகம் பாதித்த பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்தது.

Coronavirus... With mentions of Ramayana, sanjeevani booti, Brazilian President Bolsonaro writes to PM Modi

இந்நிலையில், ராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரேசில் அதிபர் ஜேர் போல்செனாரோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios