அமெரிக்காவை அலறவிடும் கொரோனா... ஒரே நாளில் 2000 பேர் பலி... நிலைகுலைந்து போன டிரம்ப்..!
ஐரோப்பாவை தொடர்ந்து அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் நியூயார்க் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் நியூஜெர்சி மாகாணம் பிடித்துள்ளது. மிக்சிகன் மாகாணம் 3ம் இடத்திலும், கலிபோர்னியா மாகாணம் 4வது இடத்திலும், 5ம் இடத்தில் லூசியானா மாகாணம் உள்ளது.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000 நெருக்கி உள்ளது. இதனால், 6 போர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியுள்ளதால் அதிபர் டிரம்ப் செய்வதறியாமல் திகைத்து போயியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. தற்போது வூஹான் மாகாணத்தில் கொரோனா முடிவுக்கு வந்து விட்டதாக சீனா அறிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு பரவி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இதுவரை உலகம் முழுவதும் 14,25,716 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அதில், 81, 968 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதேபோல், வைரஸ் பரவியவர்களில் 10, 41,920 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 47,912 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வைரஸ் பரவியவர்களில் 3,00,828 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், ஐரோப்பாவை தொடர்ந்து அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் நியூயார்க் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் நியூஜெர்சி மாகாணம் பிடித்துள்ளது. மிக்சிகன் மாகாணம் 3ம் இடத்திலும், கலிபோர்னியா மாகாணம் 4வது இடத்திலும், 5ம் இடத்தில் லூசியானா மாகாணம் உள்ளது.
உலக அளவில் இத்தாலி (17,127 பேர்), ஸ்பெயின் (14,045 பேர்) ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா (12,790 பேர்) மூன்றாவது இடத்தில் உள்ளது.