2 ஆண்டுகள் நீடிக்கும்.. உலகின் முக்கால்வாசி பேருக்கு கொரோனா தொற்ற வாய்ப்பு.. அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவு
கொரோனா தொற்றின் பாதிப்புகள் மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
கொரோனா தொற்றின் பாதிப்புகள் மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொத்துக்கொத்தாய் மக்கள் மடிந்து வருகின்றனர். இன்னும் கொரோனா தொற்றுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தத் தொற்று எப்படி ஒழியும்..? எத்தனை காலம் மக்களை தாக்கும் என்கிற கேள்விகள் அனைத்து மக்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புகள் இன்னும் இரு ஆண்டுகள் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பலருக்கும் நோய் தொற்றின் அறிகுறியே இல்லாததால், கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்துவது கடினம் என்று அப்பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் ஆராய்ச்சி பிரிவினர் கூறியுள்ளனர்.
உலகில் மூன்றில் இரு பங்கு மக்களையாவது பாதித்த பின்னர் அதற்கேற்ற எதிர்ப்பு சக்தி மனித உடலில் உருவான பின்பே இந்நோய் கட்டுக்குள் வரும் என அந்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 2022க்கு பிறகும் அலையலையாக கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.