கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பீதி அடைந்துள்ள நிலையில் 3 மாத இடைவெளிக்கு பிறகு வடகொரியா 2 ஏவுகணை சோதனை நடத்திய சம்பவம் தென்கொரியா மற்றும் அமெரிக்காவை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா உள்பட 70  நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் இறந்து வந்த நிலையில், தற்போது அது  கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 2800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்த வைரஸ் ஆனது தென்கொரியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை அங்கு 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், கொரோனா வைரஸால் காரணமாக கொரிய தீப கற்பத்தால் பதற்றம் ஏற்பட்டு வரும் நிலையில் வடகொரியா அணு ஆயுத சோதனை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய போர் திறன் வாய்ந்த ஆயுத தயாரிப்பு குறித்து வடகொரியா அறிவித்திருந்த நிலையில் இந்த ஆண்டின் முதன் முறையாக ஏவுகணை சோதனையை செய்திருக்கிறது. நேற்று மாலை கிழக்கு கடற்கரை நகரமான வான்சன் பகுதியில் இருந்து ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள வடகொரியா. படங்கள் சிலவற்றையும் வெளியிட்டுள்ளது. 

இந்த சோதனையை அதிபர் கிங் ஜான் உன் நேரில் பார்வையிட்டுள்ளார். முகமூடி அணிந்த அதிகாரிகளுடன் ராணுவ அணிவகுப்பையும் அவர் பார்வையிட்டுள்ளார். சோதனை செய்யப்பட்ட ஏவுகணையின் திறன், தாக்குதல் எல்லை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதனால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த 2019 நவம்பர் 28-ம் தேதிக்கு பிறகு வடகொரியா நடத்திருக்கும் முதல் ஏவுகணை இதுவாகும். கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் அணு ஆயுத குறைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே வடகொரியா 13 முறை ஏவுகணைகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.