கொடூர கொரோனாவின் கோரப்பசி.. ராட்சத சவக்குழிகள்.. அடுக்கடுக்காக சவப்பெட்டிகள்.. புதைக்கப்படும் பகீர் வீடியோ..!
நியூயார்க்கின் ஹார்ட் தீவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், அனைத்திலும் வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவில் கொடூர கொரோனாவின் கோரப்பசிக்கு இதுவரை 17,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4,68,895க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நியூயார்க் நகரத்தில் மட்டும் 7,800 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சடலங்களை ஒரே இடத்தில் பெரும் பள்ளம் தோண்டி அடுக்கடுக்காகப் புதைக்கப்படும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் அழையா விருந்தாளியாக 200க்கும் மேற்பட்ட நாடுகளில் அடியெடுத்து வைத்து பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. ஏழை, பணக்கார நாடுகள் என்ற பாரபட்சம் இல்லாமல் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. கண்ணுக்கே தெரியாத அந்த நுண்ணுயிரியிடமிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். கொரோனா உருவான சீனாவை விட அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பல மடங்கு உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பிரேசிலின் பெரிய கல்லறைத் தோட்டம் ஒன்றில் 100-க்கும் மேற்பட்ட சவக்குழிகள் வெட்டப்பட்டு இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், நியூயார்க்கின் ஹார்ட் தீவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், அனைத்திலும் வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவில் கொடூர கொரோனாவின் கோரப்பசிக்கு இதுவரை 17,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4,68,895க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நியூயார்க் நகரத்தில் மட்டும் 7,800 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களை தனித்தனியே அலங்கார சவப்பெட்டிகளில் வைத்துப் புதைப்பதற்கெல்லாம் நேரமும் இல்லை, ஆள்களும் இல்லை. எனவே, ஒரே இடத்தில் பெரும் பள்ளங்களை தோண்டி மொத்தமாக சாதாரண பெட்டிகளில் உடல்களை வைத்து அடுக்கடுக்காக வைத்துப் புதைக்கப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
அதில், சவக் குழியில் ஏணி வைத்து ஏறி இறங்குவதைக் காட்டுகிற - சவ அடக்கம் நடந்துகொண்டிருப்பது தொடர்பான படங்கள் தற்போது வெளியாகி அமெரிக்க மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இங்கு சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை எளிய மக்களைப் புதைக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.