கொரோனாவுக்காக மக்களை முடக்குவது முட்டாள்தனமானது... உலக நாடுகளை எச்சரிக்கும் சுகாதார அமைப்பு..!

கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையாக, வெறுமனே மாநிலங்கள் மற்றும் நகரங்களை முடக்குவது ஆபத்தானது என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

coronavirus issue...World Health Organization Warning

கொரோனா வைரஸ் காரணமாக மத்திய மற்றம் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையில் எடுத்து வருகிறது. ஆனால், மாநிலங்கள் மற்றும் நகரங்களை முடக்குவது ஆபத்தா ஒன்று என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 7 ஆயிரத்து 725 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இதுவரை உயிரிழப்பு 15 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. 35 நாடுகளில் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உத்தரவிட்டுள்ளன. 

coronavirus issue...World Health Organization Warning

அதேபோல், இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கூறுகையில்;- கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையாக, வெறுமனே மாநிலங்கள் மற்றும் நகரங்களை முடக்குவது ஆபத்தானது என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

coronavirus issue...World Health Organization Warning

நாம் உண்மையில் கவனம் செலுத்த வேண்டியது என்னவென்றால், நோய் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பது அவர்களை தனிமைப்படுத்துவது தான். வலுவான பொது சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கமால், நகரங்கள், மாநிலங்கள், மாகாணங்கள் என முடக்கப்படுவது ஆபத்தான ஒன்றும், முடக்கப்பட்டது நீக்கப்படும் போது, நோய் மீண்டும் தீவிரமாக பரவ வாய்ப்புள்ளது. பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. 

coronavirus issue...World Health Organization Warning

ஆனால், ஒன்று மட்டுமே அமெரிக்காவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுவிடும். குறைந்தது ஒரு வருடமாவது ஆகும். ஆனால் அது முற்றிலும் பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய வேண்டும். எந்தவொரு தடுப்பூசியும் அங்கீகரிக்கப்படாது மற்றும் ஒரு வருடத்திற்கு பரவலாகக் கிடைக்காது. மக்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும். நாம் பாதுகாப்பாக இருக்க இப்போது என தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios