Asianet News TamilAsianet News Tamil

சீனாவை தெளியத்தெளிய அடித்து துவம்சம் செய்யும் கொரோனா... அழிவிலிருந்து அறிகுறி இல்லாமல் மீண்டும் அழிச்சாட்டியம்

கொரோனா எங்கு ஆரம்பித்து முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டதோ அங்கு அறிகுறிகளே இல்லாமல் 980-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளதால், சீன மக்களிடம் கடும் பீதி ஏற்பட்டுள்ளது. 
 

Corona which starts off by lighting China
Author
China, First Published May 2, 2020, 5:53 PM IST

கொரோனா எங்கு ஆரம்பித்து முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டதோ அங்கு அறிகுறிகளே இல்லாமல் 980-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளதால், சீன மக்களிடம் கடும் பீதி ஏற்பட்டுள்ளது. 
 
சீனாவில் ஆரம்பித்த கொரோனா அங்கு கட்டுப்படுத்தப்பட்டு, பள்ளிகள் திறக்கப்பட்டு அங்குள்ள மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ள நிலையில் அறிகுறிகளே இல்லாமல் அங்கு கொரோனா மீண்டும் பரவத்தொடங்கி இருக்கிறது. கொரோனா நோய்க்கு உண்டான எந்த அறிகுறிகளும் இல்லாமல் 980-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. அதிலும் ஹூபெய் மாகாணத்திலும் உள்ளடங்கிய வுகான் நகரில் மட்டும் 631 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.Corona which starts off by lighting China

ஒரே நாளில் 25 பேருக்கு அறிகுறிகள் இன்றி கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக சீன சுகாதார கமிஷன் நேற்று தெரிவித்தது. இதன்மூலம் அறிகுறிகள் இன்றி கொரோனா வைரஸ் தாக்கியோரின் எண்ணிக்கை 981 ஆக உயர்ந்துள்ளது. 115 பேர் வெளிநாட்டு பயண தொடர்பில் இருந்தவர்கள். இவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.Corona which starts off by lighting China

வுகானில் தொடர்ந்து 27 நாட்களாக யாருக்கும் கொரோனா வைரஸ் தாக்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் இப்போது அறிகுறிகள் இல்லாமல் அங்கு கொரோனா தாக்கி வருவது அரசுக்கு பெருத்த தலைவலியாக அமைந்துள்ளது. நேற்று முன்தினம் ஹூபெய் மாகாணத்தில் மட்டுமே கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 2 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டறியப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொழிலாளர் தின கொண்டாட்டங்களுக்காக சீனாவில் நேற்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Corona which starts off by lighting China

பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் அங்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios